நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து – வெளியான முக்கிய தகவல்!
Nimisha Priya Death Sentence Cancelled | ஏமனில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்வதற்காக அவரது தாயும், சில அமைப்புகளும் கடுமையாக போராடி வரந்த நிலையில், தற்போது மரண தண்டனை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன், ஜூலை 29 : ஏமனில் (Yemen) மரண தண்டனை அளிக்கப்பட இருந்த கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஏற்கனவே தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய கிராண்ட் முஃப்தி அபுபக்கர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தம் குறித்து வெளியான தகவல் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏமனில் மரண தண்டனை போராட்டத்தில் சிக்கி தவித்த நிமிஷா பிரியா
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. 36 வயதாகும் இவர் மேற்காசிய நாடான ஏமனில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படடது. இந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : கழிவறையில் ரகசிய கேமரா.. 13,000 வீடியோக்களை எடுத்ததாக வாக்குமூலம்.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!
குறிப்பாக நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்காக இஸ்லாமிய மத குருவான காந்தபுரம் அபுபக்கர் மிக கடுமையாக போராடி வருகிறார். இந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய அதிகாரிகளிடம் கோரிக்கை வைப்பதற்காக அவரின் கணவர் மற்றும் 13 வயது மகள் ஏமன் சென்ற நிலையில், அவர்களுடன் காந்தபுரம் அபுபக்கரும் சென்றிருந்தார். இந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை முற்றிலுமா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை முழுவதுமாக ரத்து – காந்தபுரம் அபுபக்கர்
இது குறித்து கூறியுள்ள அபுபக்கர், முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சனாவில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.