AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

80ஸ், 90ஸ் விட ஜென்சி தலைமுறையினருக்கு IQ குறைவாக உள்ளது.. ஆனால் இந்த விஷயத்தில் ஜென்சி தான் பெஸ்ட்.. ஆய்வில் வெளியான தகவல்கள்!

Gen Z Generation Has Lower IQ Than 80s and 90s | 80ஸ், 90ஸ் தலைமுறையினர்களை விடவும் ஜென்சி தலைமுறையினர் மிகவும் குறைந்த அளவு ஐகியூ ஆற்றலை கொண்டுள்ளதாக நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

80ஸ், 90ஸ் விட ஜென்சி தலைமுறையினருக்கு IQ குறைவாக உள்ளது.. ஆனால் இந்த விஷயத்தில் ஜென்சி தான் பெஸ்ட்.. ஆய்வில் வெளியான தகவல்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Feb 2026 14:00 PM IST

80ஸ், 90ஸ் காலக்கட்டங்களில் பிறந்தவர்களை விடவும் ஜென் சி தலைமுறையினர் (Gen Z Generation) குறைந்த ஐகியூ அளவை கொண்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 80ஸ், 90ஸ் தலைமுறையினர் மற்றும் ஜென்சி தலைமுறையினர் இடையே ஏரளமான வித்தியாசங்கள் உள்ளது தொடர்பான தொடர் விவாதங்கள் எழுந்து வந்த நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஜென்சி தலைமுறையினர் குறித்து ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜென்சி தலைமுறையினர் குறைவான ஐகியூ கொண்டுள்ளனர்

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பிறந்தவர்கள் வெவ்வேறு விதமான வித்தியாசமான வாழ்க்கை முறையை கொண்டு இருப்பர். அப்படிப்பட்டவர்கள் தான் 80ஸ், 90ஸ் மற்றும் ஜென்சி தலைமுறையினர். 80ஸ் மற்றும் 90ஸ் தலைமுறையில் பிறந்தவர்களை விடவும் ஜென்சி தலைமுறையினர் மிகவும் வித்தியாசமான சிந்தனைகள், வாழ்க்கை முறைகளை கொண்டுள்ளனர். குறிப்பாக ஜென்சி தலைமுறையினர் அதிகம் கோபம் கொண்டவர்களாகவும், பொறுமை அற்றவர்களாகவும் உள்ளதாக தொடர் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதையும் படிங்க : இளைஞரின் மலக்குடலில் துப்பாக்கி குண்டு…மருத்துவமனையை அலரவிட்ட சம்பவம்…முழு விவரம் என்ன!

குறிப்பாக பணி சூழல்களில் ஜென்சி தலைமுறையினர் தங்களை தக்க வைத்துக்கொள்வதில்லை என்றும் அவர்கள் மிகவும் வித்தியாசமான வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர் என்றும் பரவலான கருத்துக்கள் நிலவி வந்தன. இந்த நிலையில் தான் ஜென்சி தலைமுறையினர் குறித்த புகழ்பெற்ற நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆழகாம சிந்திக்கும் திறன், கவனம் செலுத்தும் ஆற்றல் குறைந்துள்ளது

ஜென்சி தலைமுறையினர் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு அழமாக சிந்திக்கும் திறன் மற்றும் நீண்ட நேரம் கவனம் செலுத்தும் ஆற்றல் குறைந்துள்ளது. அறிவுத்திறன் மட்டுமன்றி, ஜென்சி தலைமுறையினரின் பழக்க வழக்கங்களும் மில்லினியல்களை விட மிகவும் வித்தியாசமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்த சீன நபர்… பழைய சிம் கார்டுகளுக்கு அதிகரித்த மவுசு!

இந்த ஆய்வில் ஜென்சி தலைமுறையினர் குறித்த அற்புதமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜென்சி தலைமுறையினர் மதுப்பழகத்தில் முந்தைய தலைமுறையினரை விட ஆர்வம் குறைந்துள்ளவர்களாக உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us