Russia Flight Accident : கீழே விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானம்.. 49 பேர் பலி?.. மீட்பு பணிகள் தீவிரம்!

Russia Flight Accident | ரஷ்யாவில் இருந்து சீனா நோக்கி பயணம் செய்துக்கொண்டு விமானம் ஒன்று சீனாவின் எல்லை பகுதியான டிண்டா பகுதியில் மாயமாகியுள்ளது. இந்த நிலையில், மாயமான விமானத்தை தேடும் பணிகள நடைபெற்றபோது, விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், விமானத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Russia Flight Accident : கீழே விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானம்.. 49 பேர் பலி?.. மீட்பு பணிகள் தீவிரம்!

விமான விபத்து

Updated On: 

25 Jul 2025 18:01 PM

ரஷ்யா, ஜூலை 24 : ரஷ்யாவில் (Russia) இருந்து சீனா (China) நோக்கி சென்றுக்கொண்டிருந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விமானம் பயணம் செய்துக்கொண்டு இருந்தபோதே அதில் இருந்து சிக்னல் கிடைக்காமல் போன நிலையில், விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டபோது விபத்து குறித்து தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ரஷ்ய விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கீழே விழுந்து நொறுங்கிய விமானம் – அனைவரும் பலி

சைபீரியாவை தளமாக கொண்ட அங்கார என்ற விமான நிறுவனம் ஒன்று விமானங்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் அந்த நிறுவனம் இன்று (ஜூலை 24, 2025) An-24 என்ற விமானத்தை இயக்கியது. இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என சுமார் 50 பேர் பயணம் செய்த நிலையில், விமானம் சீனாவின் எல்லை பகுதியான டிண்டாவை நோக்கி பறக்க தொடங்கியது. விமானம் பறந்துக்கொண்டு இருந்தபோதே திடீரென ரேடார் கண்காணிப்பில் இருந்து விலகியுள்ளது. இதனை தொடர்ந்து விமானத்தின் தொடர்பை, ரஷ்ய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் இழந்ததாக கூறப்படுகிறது.

5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் பயணித்த விமானம் விபத்து

இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட் 43 பயணிகள் பயணம் செய்த நிலையில், விமான குழிவினரும் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற அடிப்படையில் அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். அப்போது திண்டாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : Bangladesh Plane Crash: பள்ளிக்கூடம் மீது விழுந்த வங்கதேச விமானப்படை விமானம்.. இதுவரை 19 பேர் உயிரிழப்பு..!

விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான நிலையில், விடாமல் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர மீட்பு படையினர் போராடி வருகின்றனர். ஏற்கனவே இந்தியாவில் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான நிலையில், 249 பயணிகள் பலியான தற்போது இந்த ரஷ்ய விமான விபத்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என அதிகாரிகள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.