பாகிஸ்தான் நிலநடுக்கம்.. அதிகாலை நேரத்தில் குலுங்கிய கட்டங்கள்.. வீதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!

5.2 Magnitude Earthquake in Pakistan | இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், இன்று (ஜூன் 29, 2025) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தூங்கிக்கொண்ட்டு இருந்த போது கட்டடங்கள் குலுங்கிய நிலையில், பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பாகிஸ்தான் நிலநடுக்கம்.. அதிகாலை நேரத்தில் குலுங்கிய கட்டங்கள்.. வீதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

29 Jun 2025 08:19 AM

 IST

பாகிஸ்தான் , ஜுன் 29 : பாகிஸ்தானில் (Pakistan) இன்று (ஜூன் 29, 2025) அதிகாலை திடீரென நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளாவில் சற்று வலிமையாக இருந்ததால் அங்கு கட்டடங்கள் குலுங்கிய நிலையில், பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானின் எந்த அபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று (ஜூன் 29, 2025) அதிகாலை திடீர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது சரியாக பாகிஸ்தானின் முல்தான் நகரில் இருந்து சுமார் 149 கிலோ மீட்டருக்கு மேற்கே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் மக்கள் வீடுகளுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் குலுங்கிய நிலையில், பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

5.2 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம்

 

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..