யுரேனஸ் கிரகத்தின் நிலவில் பிரம்மாண்ட கடல்?.. வியப்பூட்டும் கண்டுபிடிப்பு!

100 Kilometer Depth Sea In Moon Of Uranus | விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் பல்வேறு உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், யுரேனஸ் கிரகத்தில் உள்ள ஒரு நிலவில் 100 கிலோ மீட்டர் ஆழம் கொண்ட கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

யுரேனஸ் கிரகத்தின் நிலவில் பிரம்மாண்ட கடல்?.. வியப்பூட்டும் கண்டுபிடிப்பு!

மாதிரி புகைப்படம்

Published: 

11 Feb 2026 07:26 AM

 IST

வாஷிங்டன், பிப்ரவரி 11 : விண்வெளி (Space) தொடர்பான ஆய்வுகளில் பல்வேறு உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வருகின்றன. அந்த வகையில், யுரேனஸ் (Uranus) கோலில் உள்ள நிலவு ஒன்றில் பிரம்மாண்ட கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது உலக அளவில் மிகப்பெரியன் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், யுரேனஸ் கோல் தொடர்பான விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

யுரேனஸின் நிலவில் பிரம்மாண்ட கடல் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

யுரேனஸ் கோலின் மிகச்சிறிய நிலவுகளில் ஒன்றாக உள்ள மிராண்டாவில், அதன் தடிமனான பனி மேலோட்டத்திற்கு அடியில் சுமார் 100 கிலோ மீட்டர்கள் ஆழமுள்ள பிரம்மாண்ட கடல் இருக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, 1986 ஆம் ஆண்டு வாயேஜர் 2 (Voyager 2) என்ற விண்கலம் சில புகைப்படங்களை எடுத்தது. அந்த புகைப்படங்களை நவீன கணினி மாதிரிகள் மூலம் ஆய்வு செய்ததில் இந்த வியக்கத்தக்க தகவல் வெளியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : உலகுக்கு இந்தியா அளித்த பரிசு தமிழ் – மலேசியாவில் பிரதமர் மோடி பெருமிதம்

கடல் உறைந்து போகாமல் இருக்க வாய்ப்பு உள்ளது – விஞ்ஞானிகள்

யுரேனஸ் கோலின் மிகச்சிறிய நிலவுகளில் ஒன்றாக உள்ள இந்த மிராண்டா சூரியனில் இருந்து பல கோடி மைல்கள் தூரத்தில் இருந்தாலும், அதில் கடல் நீர் உறைந்து போகாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், கடல் தன்னீர் திரவ நிலையிலேயே இருக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதையும் படிங்க : 80ஸ், 90ஸ் விட ஜென்சி தலைமுறையினருக்கு IQ குறைவாக உள்ளது.. ஆனால் இந்த விஷயத்தில் ஜென்சி தான் பெஸ்ட்.. ஆய்வில் வெளியான தகவல்கள்!

பல ஆண்டுகளாக பூமி தவிர வேறு எந்த கோல்களிலாவது மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என்பது தொடர்பான தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், யுரேனஸில் உள்ள மிராண்டாவில் தண்ணீர் இருப்பது விண்வெளியில் பூமியை தவிர பிற பகுதிகளில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட இடங்களின் பட்டியலில் மிரண்டாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்