வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்..
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் வழங்கிய பல வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் வழங்கிய பல வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், “ஜூன் மாதத்தில் அமல்படுத்தப்படும்” என்று அரசு தரப்பில் கூறப்படுகின்றது எனவும் விமர்சித்தார். “ஜூன் மாதத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருப்பார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போது இந்த வாக்குறுதி ஏமாற்றும் வாக்குறுதியாக மாறிவிடாதா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
Published on: Feb 23, 2026 10:23 PM