எத்தனை தொகுதிகள் என்று விரைவில் அறிவிக்கப்படும் – எம்.பி கார்த்திக் சிதம்பரம்
இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்குகிறது; அதில் திமுக ஒரு அங்கமாக உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில், திமுக கூட்டணிக்கு தலைமை தாங்கி வருகிறது; நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்குகிறது; அதில் திமுக ஒரு அங்கமாக உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில், திமுக கூட்டணிக்கு தலைமை தாங்கி வருகிறது; நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். போட்டியிடும் முறை உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த ஆலோசனைகள் நிறைவடைந்த பிறகே எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாணிக்கம் தாக்கூர் கூறிய கருத்துக்கு தாம் பொறுப்பேற்க முடியாது என்றும், அவரவர் கருத்து குறித்து அவரவர்களிடமே கேட்க வேண்டும் என்றும் கார்த்திக் சிதம்பரம் விளக்கமளித்தார்.