மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம்.. என்னென்ன வசதிகள்?

Jul 16, 2025 | 7:15 PM

திருச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் எதிர்கால வளர்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு, பஞ்சப்பூர் பகுதியில் ரூ.480 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையம் ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் இப்பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தது.

திருச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் எதிர்கால வளர்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு, பஞ்சப்பூர் பகுதியில் ரூ.480 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையம் ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் இப்பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் மற்றும் தூரநகர் பஸ்கள் இயக்கப்படாமல், அனைத்தும் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். மத்திய நிலையத்தில் நகர்பயண பஸ்கள் மட்டும் இயங்கும். சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.