Viral Video : இது உண்மையா? அமேசான் நதியில் ராட்சத அனகோண்டா… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Giant Anaconda : அமேசான் காடுகளில் உள்ள நதியில் நீந்தும் பிரம்மாண்ட அனகோண்டாவின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 50 அடி நீளமுள்ளதாகக் கருதப்படும் இந்த பாம்பின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. பலரும் இதை ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். வீடியோவின் உண்மைத்தன்மை குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் பரவலாக நடந்து வருகிறது.

வைரல் வீடியோ
மனிதர்களைப் பொறுத்தவரைப் பாம்பு (Snake) என்றால் சொன்னால் உடலே நடுங்கும். அதிலும் அனகோண்டா (Anaconda) போன்ற பெரியவகை பாம்புகளைப் பார்த்தாலே உயிரே கையில் இருக்காது. அந்த விதத்தில் பாம்பு மிகவும் அச்சுறுத்தலான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மாதிரியான அனகோண்டா பாம்புகள் அடர்ந்த காடுகளில் மற்றும் சதுப்புநில காடுகளில் (mangrove forests) அதிகமாகக் காணப்படுகிறது. அதிலும் பெரிய அனகோண்டா வகை பாம்புகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கின்றனர். இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள், பல ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர். அந்த வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி பலரையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் அமேசான் காடுகளில் (Amazon forest) உள்ள ஒரு நதியில் ஒரு பிரம்மாண்ட ஜெயண்ட் அனகோண்டா நீந்திச் செல்வதுபோல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை ஹெலிகாப்டரில் (helicopter) இருந்து எடுத்துப் போல் இருக்கிறது. அந்த அனகோண்டா பார்ப்பது நதியில் பாதி அளவு இருப்பதுபோல் இருக்கிறது. தோராயமாகப் பார்த்தால் சுமார் 40 முதல் 50 அடி நீளம் வரை இருப்பதுபோல தெரிகிறது. ஆனால் இவ்வளவு பெரிய பாம்பு அமேசான் காடுகளில் இருக்குமா எனப் பலரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பலரும் இந்த வீடியோவை ஏஐயை பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர் என்றும் கூறி வருகிறார்கள்.
ஆனால் இந்த வீடியோவை பார்ப்பதற்கு அப்படியே நிஜத்தைப் போல் தெரிகிறது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ஆழமான நீரில் பாம்பு மேலோட்டமாக நீந்துவது போல இருக்கிறது. நதியானது ஆழமாகவும் மிக வேகமானதாகவும் இருக்கும். ஆனால் இந்த பாம்பு மெதுவாக நதியில் நீந்திச் செல்வதுபோல இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வீடியோ :
एक बार फिर से अमेजन के जंगलों में बड़े एनाकोंडा सांप को देखा गया। pic.twitter.com/ssn0AjihQB
— Dr. Sheetal yadav (@Sheetal2242) May 8, 2025
இந்த வீடியோவை, Dr. Sheetal yadav என்ற எக்ஸ் பயனர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சிலர் ஹெலிகாப்டரில் பறந்தபடியே வீடியோ எடுத்துச் செல்கிறார்கள் . அப்போது அமேசான் காடுகளில் மேல் பரப்பில் பறக்கும்போது, நதியில் எதோ வேகமாகச் செல்வதுபோல தெரிகிறது. அதைப் பார்க்கும்போது பிரம்மாண்ட ஜெயண்ட் அனகோண்டா நதியில் நீந்தி செல்வதுபோல இருக்கிறது. ஆனால் அவ்வளவு பெரிய அனகோண்டா உலகத்தில் இருக்கிறதா என சந்தேகிக்கவைக்கிறது. மேலும் இந்த வீடியோவை பலரும் ஏஐ வீடியோ என்றும் கூறி வருகின்றனர்.
வீடியோவின் கீழ் பயனர்களின் கருத்துக்கள் :
இந்த வீடியோவானது கிட்டத்தட்ட 1 மில்லியன் பார்வைகளை நெருங்குகிறது. மேலும் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இதில் முதல் பயனார் ஒருவர் “என்னது இது இவ்வளவு பெரிய அனகோண்டாவா, அதை வீடியோவில் பார்க்கும்போதே எனக்குப் பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் “இது உண்மையிலே அனகோண்டாதானா, ஆனால் பார்ப்பதற்கு ஏஐ வீடியோ போல இருக்கிறது என்று கூறியுள்ளார்..