Viral Video : குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டும் நபர்.. உணர்ச்சி பொங்கும் வீடியோ!
Man Carries Baby While Driving Auto | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு ஆட்டோவில் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவ்வாறு இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் சில வியப்பூட்டும் வகையிலும், சில உணர்ச்சிவப்படும் செய்யும் வகையிலும் இருக்கும். அப்படிப்பட்ட உணர்ச்சி வசமான வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் பலரும் மிகவும் உணர்ச்சி பொங்க தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டும் நபர்
ஒரு குடும்பத்தில் குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தையை கவனித்துக்கொள்ளவே தனியாக ஆட்கள் தேவைப்படும். குழந்தைகளை ஐந்து நிமிடங்கள் கூட தனியாக விட்டுச் செல்ல முடியாது. இதன் காரணமாக பெரும்பாலான இந்திய குடும்பங்களில் தாய் பணிக்கு செல்லாமல் தனது குழந்தைகளை கவனித்துக்கொள்வார். ஒருவேளை பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் என்றால் குழந்தையையும் உடன் அழைத்துச் செல்வார். அந்த வகையில் ஆட்டோ ஓட்டும் நபர் ஒருவர் குழந்தையை மார்பில் கட்டி அணைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : பட்டு உடையுடன் ஓணம் கொண்டாடிய நாய் குட்டி.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், ஆட்டோ ஒன்று சாலையில் செல்கிறது. அந்த ஆட்டோவை ஒருவர் ஓட்டிச் செல்லும் நிலையில், அவர் ஒரு குழந்தையை தனது மார்போடு அணைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுகிறார். இந்த காட்சி காண்போரை உணர்ச்சிவசப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைராலாகி வரும் நிலையில், பலரும் அந்த நபர் மற்றும் குழந்தை நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.