Viral Video : லண்டன் சாலைகளில் சமோசா விற்கும் இந்தியர்.. வைரலாகும் வீடியோ!

Indian Man Selling Samosas in London Streets | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்தியர் ஒருவர் லண்டன் சாலைகளில் பாட்டு பாடி நடனமாடிக்கொண்டு சமோசா விற்பனை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : லண்டன் சாலைகளில் சமோசா விற்கும் இந்தியர்.. வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

01 Oct 2025 23:51 PM

 IST

இந்தியாவில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்லும் அவர்கள் அங்கு ஏதேனும் வேலை செய்து தங்களது வாழ்நாளை கழிக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு சென்றுள்ள நபர், லண்டன் சாலைகளில் சமோசா விற்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் பலரும் பல விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

லண்டன் சாலைகளில் சமோசா விற்கும் இந்தியர்

இந்தியாவின் உணவுகளுக்கு தனி ரசிகர் பட்டாலமே உள்ளது. இந்தியர்கள் சில தனித்துவமான உணவு வகைகளை தன்வசம் வைத்துள்ளனர். சமோசா, சென்னா மசாலா, பானி பூரி என சில சுவை மிகுந்த உணவுகளுக்கு இந்தியர்கள் அடிமை என்றால் அது மிகை ஆகாது. காரணம் மாலை வேளைகளில் இந்த உணவு கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த அளவுக்கு இந்திய மக்கள் இந்த உணவுகளின் மீது மிகுந்த காதல் கொண்டுள்ளனர். இதன் காரணமாக இந்திய சாலைகளில் இந்த கடைகளை அதிகம் காண முடியும். இந்திய சாலைகள் மட்டுமன்றி, உலக நாடுகளில் இந்தியாவின் இந்த சிறப்பு உணவுகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : கொல்கத்தா மழை வெள்ளம்.. மீனை கவ்விக்கொண்டு சுற்றி வந்த பாம்பு.. குடியிருப்பு வாசிகள் அச்சம்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இந்தியர் ஒருவர் இந்திய பாரம்பரிய உடை அணிந்துக்கொண்டு கழுத்தில் பெட்டி போல கட்டிக்கொண்டு அதில் சமோசாக்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்கிறார். அவை வித்தியாசமான பாடல்களை பாடி, நடனமாடிக்கொண்டே சமோசாக்களை விற்பனை செய்கிறார். பிகாரை சேர்ந்த அவர், லண்டனில் பிரபலமாக பிகாரி பாபு என அழைக்கப்படுகிறார். லண்டனில் வாழும் இந்தியர்கள் சிலர் அவரிடம் சமோசாக்களை வாங்கி சாப்பிடும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பெல்ஜியம் சாலையில் களைக்கட்டிய கர்பா நடனம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக  வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.