Viral Video : தலைக்கேறிய மதுபோதை.. ஆபத்தான முறையில் சாலையில் ஒட்டகம் ஓட்டிச் சென்ற நபர்!

Drunken Man Rides Camel | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தலைக்கேறிய மது போதையில் ஒருவர் ஹைதராபாத் சாலையில் ஒட்டகம் ஓட்டிச் செல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Viral Video : தலைக்கேறிய மதுபோதை.. ஆபத்தான முறையில் சாலையில் ஒட்டகம் ஓட்டிச் சென்ற நபர்!

வைரல் வீடியோ

Published: 

19 Jun 2025 17:15 PM

இந்தியாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய சாலை விதிகள் அமலில் உள்ளன. அவ்வாறு அமலில் இருக்கும் சாலை விதிகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது என்பது தான் முதன்மை விதியாக உள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்படலாம் என்றும், மது அருந்தியிருக்கும் நபர் விபத்துக்குள்ளானல் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் இந்த விதிகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நிலையில், ஹைதராபாத்தின் (Hyderabad) பரபரப்பான சாலையில் ஒருவர் மது அருந்திவிட்டு ஒட்டகத்தை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தலைக்கேறிய போதையில் ஒட்டகம் ஓட்டிய நபர்

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் தலைக்கேறிய மதுபோதையில் ஹைதராபாத் சாலையில் ஒட்டகம் ஓட்டிச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண சூழல்களிலேயே ஒட்டகங்களை கட்டுப்படுத்த முடியாது என்ற சூழலில், அந்த நபர் பொதுமக்களுக்கும், அந்த குதிரைக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பயணம் செய்தது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பரபரப்பான ஹைதராபாத் மேம்பால சாலையில் ஒட்டகம் ஒன்று ஓடுகிறது. முதலில் பார்ப்பதற்கு அந்த ஒட்டகத்தின் மீது யாரும் இல்லாதது போல் தோன்றுகிறது. ஆனால், அந்த ஒட்டகத்தின் மீது ஒருவர் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். அந்த நபர் மது போதையில் ஒட்டகத்தை ஓட்டி செல்கிறார். மதுபோதை காரணமாக அந்த நபர் மயங்கி மயங்கி விழும் நிலையில், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அந்த ஒட்டகம் சாலையின் அந்த பக்கமும் இந்த பக்கமுமாக ஓடுகிறது.

அதுமட்டுமன்றி, சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையிலும் அந்த ஒட்டகம் ஓடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ள நிலையில், ஒட்டகத்திற்கும், பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.