Viral Video : மகளுக்கு ஊசி போடும் போது கதறி கதறி அழுத தந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Dad Cries During Daughter's Vaccination | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தந்தை ஒருவர் தனது மகளுக்கு ஊசி போடும்போது கதறி அழும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

வைரல் வீடியோ
தந்தை – மகள் உறவு எப்போதும் மிகவும் அழகாகவும், ஆழமாகவும் இருக்கும். ஆண் பிள்ளைகளை விடவும், பெண் பிள்ளைகளிடம் தந்தைக்கு அதிக பிணைப்பு இருக்கும். தந்தைகளின் குட்டி இளவரிகளாகவே மகள்கள் இருப்பார்கள் என்றால் அது மிகை ஆகாது. அந்த வகையில், தனது மகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கதறி கதறி அழும் தந்தையின் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதனை பார்க்கும் பலரும், இதுதான் இணையத்தில் வைரலாகி வரும் மிக அழகான வீடியோ என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், அந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகளுக்கு ஊசி செலுத்தும் போது கதறி கதறி அழுத தந்தை
குழந்தைகள் பிறந்த ஒரு வருடத்திற்குள்ளாக அவர்களின் உடல் நலனை காக்கும் வகையில் சில தடுப்பு ஊசிகள் செலுத்தப்படும். குறிப்பாக போலியோ, அம்மை உள்ளிட்ட சில முக்கிய தடுப்பு ஊசிகள் போடப்படும். ஊசி போடுவதற்கு பெரியவர்களே பயப்படும் நிலையில், குழந்தைகள் கண்டிப்பாக அழுதுவிடும். ஆனால், இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஊசி போடுவதற்கு குழந்தையை விட அவரது தந்தை அதிகமாக அழுகிறார். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அப்போது மருத்துவர் ஊசியை குழந்தையில் அருகில் கொண்டுவரும் போதே அந்த தந்தை அழ தொடங்கிவிடுகிறார். பிறகு குழந்தையின் கையில் ஊசி போடப்பட்ட நிலையில், குழந்தை துடித்து அழுவதை கண்டு அவர் கதறி கதறி அழுகிறார். குழந்தைக்கு ஆறுதல் சொல்ல முடியாதவர் போல அவர் குழந்தையை அணைத்துக்கொண்டு அழுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மகள் என வரும்போது அனைத்து தந்தைகளும் குழந்தைகளாக மாறி விடுகின்றனர் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இப்போது யாரை முதலில் சமாதானம் செய்வது என தெரியாமல் தாய் குழப்பத்தில் இருப்பார் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மேலும் சிலர், இதுதான் இணையத்தில் தற்போது வைரலாகி வரும் மிக அழகிய வீடியோ என பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.