Viral Video : உங்கள் ரூ.132 என்னை பணக்காரனாக மாற்றாது.. பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கேப் டிரைவர்!
Cab Driver and Passenger Arguing Over Drop Location | ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பயணம் செய்யும் மக்கள் லொகேஷன் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், லொகேஷன் தொடர்பாக கேப் டிரைவர் மற்றும் பயணிக்கு ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
தற்போதைய சூழலில் பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை விடவும் ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இதில் பல நன்மைகள் இருந்தாலும், சில சிக்கல்களும் உள்ளன. அவ்வாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், கேப் ஓட்டுநருக்கும் பயணி ஒருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேப் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பயணி
ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை புக் செய்து பயணம் செய்வதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது சரியான லொகேஷனை மார்க் செய்வது மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. இந்த நிறுவனங்களை பொருத்தவரை எந்த லொகேஷனுக்கு வாகனம் புக் செய்யப்பட்டுள்ளதோ அங்கு தான் பயணியை இறக்கிவிட வேண்டும். இத்தகைய சூழலில் பயணிகளுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படும். அத்தகைய வாக்குவாதத்தின் வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : கட்டிப்பிடிக்க வேண்டும்.. கொரியா பெண்களிடம் ஆசையை கூறிய இளைஞர்.. வலுக்கும் கண்டனம்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Not all women, but always women. pic.twitter.com/jf2GINptp0
— ShoneeKapoor (@ShoneeKapoor) September 21, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்று கேப் டிரைவர் மற்றும் பெண் பயணியிடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அந்த பெண் பயணி நான் சொல்லும் இடத்தில் இறக்கிவிடவில்லை என்றால் பணத்தை தரமாட்டேன் என்று கூறுகிறார். அதற்கு அந்த கேப் ஓட்டுநர் நீங்கள் தரவேண்டிய அந்த ரூ.132 என்னை பணக்காரனாக மாற்றாது. அது உங்களையும் பணக்காரராக மாற்றாது என்று கூறுகிறார். இவை அனைத்தும் அந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் டேஷ் கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : தினமும் 7 லிட்டர் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழும் நபர்.. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், கேப் டிரைவருக்கு ஆதரவாக சிலரும், அந்த பெண்ணுக்கு ஆதரவாக சிலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.