யூடியூபில் வந்த முக்கிய மாற்றம்.. பயனர்கள் இனி எந்தவித தடையுமின்றி வீடியோ பார்க்கலாம்!
New Changes in YouTube to Watch Distraction Free | யூடியூபில் பயனர்களின் நலனுக்காக ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, யூடியூபில் வீடியோ முடியும்போது கடைசியில் சில வீடியோக்களின் பரிந்துரைகள் தோன்றும் நிலையில், அது பயனர்களுக்கு இடையூராக இருக்கும் என்பதால் யூடியூப் அதனை நீக்கம் செய்துள்ளது.

மாதிரி புகைப்படம்
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு செயலியாக உள்ளதுதான் யூடியூப் (YouTube). இந்த செயலியை பயன்படுத்தி பாடல்கள், வீடியோக்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் என பல வகையான பொழுதுபோக்கு அம்சங்களை பெற முடியும். இதன் காரணமாக இது பலருக்கும் மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. யூடியூப் செயலியை இவ்வாறு பரவலாக பலரும் பயன்படுத்தும் நிலையில், அது குறித்து அந்த நிறுவனம் ஒரு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் யூடியூப்
கூகுள் நிறுவனத்தின் யூடியூப் செயலி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு செயலியாக உள்ளது. இந்த செயலிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ள நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் அதில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் பயனர்களுக்கு சிக்கலாக இருந்த ஒரு அம்சத்தை யூடியூப் தற்போது நீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் இனி பயனர்கள் எந்தவித தடையுமின்றி யூடியூபில் வீடியோக்களை பார்க்கலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : ரூ.79,999-க்கான கூகுள் பிக்சல் 9 வெறும் ரூ.34,999-க்கு விற்பனை.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் அதிரடி தள்ளுபடி!
யூடியூபில் வந்துள்ள முக்கிய மாற்றம்
அதாவது பொதுவாக யூடியூபில் வீடியோ பார்க்கும்போது அந்த வீடியோவின் முடிவில் ஏற்கனவே பார்த்துக்கொண்டு இருக்கும் வீடியோ தொடர்பான சில வீடியோக்களின் பரிந்துரைகள் தோன்றும். அது வீடியோ முடிவதற்கு முன்னதாகவே தோன்றிவிடும். இதன் காரணமாக வீடியோக்களை கடைசி வரை முழுமையாக பார்க்க முடியாத சூழல் உருவாகும். இது பயனர்களுக்கு இடையூறான அம்சமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான், கூகுள் நிறுவனம் யூடியூபில் வரும் அந்த பரிந்துரை வீடியோக்களை நீக்கம் செய்துள்ளது.
இதையும் படிங்க : முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்றலாமா?.. ரயில்வே விதிகள் கூறுவது என்ன?
யூடியூபில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முக்கிய மாற்றம் காரணமாக இனி பயனர்கள் எந்த வித தடையுமின்றி கடைசி வரை வீடியோவை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.