WhatsApp : வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்.. என்ன என்ன?
WhatsApp's 3 New Privacy Features | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த செயலியில் ஏற்கனவே பல சிறப்பு அம்சங்கள் உள்ள நிலையில், சமீபத்தில் 3 புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மிகவும் சிறந்த தகவல் பரிமாற்ற செயலியாக உள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த வாட்ஸ்அப் செயலியை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் செயலி மூலம் பயனர்கள் ஆடியோ கால், வீடியோ கால், குறுஞ்செய்தி பரிமாற்றம், ஆவண பரிமாற்றம், புகைப்படம் மற்றும் வீடியோ பரிமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு அனைத்து தேவைகளுக்கும் ஒரே செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், பலரும் அதனை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பயனர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வாட்ஸ்அப் செயலி
வாட்ஸ்அப் செயலியில் உள்ள சிறப்பு அம்சங்கள் மட்டுமன்றி, அதில் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாக உள்ளதால் ஏராளமான பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே பல சிறப்பு அம்சங்கள் உள்ள நிலையில், பல புதிய அம்சங்களை அந்த நிறுவனம் அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் புதியதாக 3 அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்ட 3 புதிய அம்சங்கள்
வாட்ஸ்அப் சமீபத்தில் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மேம்படுத்தப்பட்ட தனியுரிமை
தனிநபர் தகவல்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வாட்ஸ்அப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. தற்போது அதனை மேம்படுத்தும் வகையில் Advanced Chat Privacy அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே உள்ள பாதுகாப்பு அம்சங்களை தாண்டி, வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் புகைப்படம் அனுப்புநருக்கு தெரியாமல் பெறுநரின் கேலரியில் பதிவு செய்யப்படுவதை தடுக்கும்.
குழுக்களில் யார் சேர்க்கலாம் என்பதை முடிவு செய்யலாம்
சாதாரணமாக வாட்ஸ்அப் பயனர்களின் செயலியில் குறைந்தது 5 வாட்ஸ்அப் குழுக்களாவது இருக்கும். இதற்கு காரணம், வாட்ஸ்அப் செயலியில் உள்ளவர்கள் யாரை வேண்டுமானாலும் குழுக்களில் இணைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தான் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் குழுக்களில் தங்களை யார் இணைக்க வேண்டும் என்பதை பயனர்கள் தீர்மானிக்கலாம்.
தெரியாத அழைப்புகளை நிராகரித்தல்
வழக்கமாக தெரியாத அழைப்புகளில் இருந்து போன் கால்கள் வந்தால் வெறும் மொபைல் எண் மற்றுமே திரையில் தோன்றும். ஆனால், வழக்கம் போல் மொபைல் போன் அழைப்பு ஒலி கேட்கும். இது தொடர்பாகவும் வாட்ஸ்அப் ஒரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. அதாவது, தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் வழக்கமாக போன் அழைப்புகளுக்கு வரும் ஒலி மற்றும் வைப்ரேஷன் உள்ளிட்டவை எதுவும் இருக்காது.