Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pat Cummins: 18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! சிறப்பு சாதனையை பதிவு செய்த பாட் கம்மின்ஸ்..!

Powerplay hat-trick: ஐபிஎல் 2025 இல், ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், பாட் கம்மின்ஸ் அசத்தலான பந்துவீச்சு மூலம் டெல்லி அணியைச் சீர்குலைத்தார். பவர் பிளேயில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், ஐபிஎல் வரலாற்றில் இத்தகைய சாதனை படைத்த முதல் கேப்டன் ஆனார். இருப்பினும், ஹைதராபாத் அணியின் பிளே ஆஃப் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது.

Pat Cummins: 18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! சிறப்பு சாதனையை பதிவு செய்த பாட் கம்மின்ஸ்..!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 05 May 2025 22:40 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 55வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் (Pat Cummins) முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 36 பந்துகளில் 41 ரன்களும், அஷூதோஷ் சர்மா 26 பந்துகளில் 41 ரன்களும் எடுத்திருந்தனர். ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், உனத்கர், ஹர்ஷல் படேல், ஜீஷன் மலிங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

சிறப்பு சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்:

ஐபிஎல் 2025 சீசனில் பாட் கம்மின்ஸ் வரலாறு படைத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக பாட் கம்மின்ஸ் பவர் பிளேயிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், பாட் கம்மின்ஸ் அவ்வாறு செய்த முதல் பந்துவீச்சு கேப்டன் ஆனார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த கேப்டனும் இந்த சாதனையை செய்ததில்லை. பவர்பிளேயில் பாட் கம்மின்ஸ் மூன்று ஓவர்கள் வீசி, மூன்று ஓவர்களின் முதல் பந்திலேயே டெல்லி பேட்ஸ்மேன்களை பெவிலியன் அனுப்பினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கருண் நாயரை முதல் ஓவரின் முதல் பந்திலேயே கம்மின்ஸ் ஆட்டமிழக்க செய்தார். அதனை தொடர்ந்து, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஃபாஃப் டு பிளேசிஸை 2.1 பந்திலும், அபிஷேக் போரலை 4.1 பந்திலும் பாட் கம்மின்ஸ் ஆட்டமிழக்க செய்தார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் பாட் கம்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள்.

புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் அணி எந்த இடத்தில் உள்ளது..?

ஐபிஎல் 2025ல் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான இந்திய அணி பிளே ஆஃப் போட்டியிலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. ஹைதராபாத் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி, 3 வெற்றி மற்றும் 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், ஹைதராபாத் அணி 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

டெல்லிக்கு எதிரான போட்டி உட்பட ஹைதராபாத் அணிக்கு மொத்தம் 4 போட்டிகள் மீதமுள்ளன. இந்த 4 போட்டிகளிலும் ஹைதராபாத் அணி வென்றாலும், அவர்களால் 14 புள்ளிகளை மட்டுமே பெறும். இந்த வருட ஐபிஎல் சீசனைப் பார்க்கும்போது, ​​ஹைதராபாத் அணி பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற 16 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதேநேரத்தில், ஐபிஎல்லில் 14 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற 4 அணிகள் உள்ளன.

DCvSRH : ஹைதராபாத்தில் அதிரடியாக ஆடிய மழை - போட்டி ரத்து!
DCvSRH : ஹைதராபாத்தில் அதிரடியாக ஆடிய மழை - போட்டி ரத்து!...
முடி உதிர்தலுக்கான காரணம் என்ன ? இந்த அறிகுறிகள் இருக்கிறதா?
முடி உதிர்தலுக்கான காரணம் என்ன ? இந்த அறிகுறிகள் இருக்கிறதா?...
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்!
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்!...
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?...
18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! புது சாதனை படைத்த கம்மின்ஸ்!
18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! புது சாதனை படைத்த கம்மின்ஸ்!...
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!...
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!...
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்...
வீடியோவுக்காக பேன்டில் தீ பற்ற வைத்த நபர் - வைரலாகும் ஷாக் வீடியோ
வீடியோவுக்காக பேன்டில் தீ பற்ற வைத்த நபர் - வைரலாகும் ஷாக் வீடியோ...
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!...
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!...