Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: டெல்லிக்கு தலைவலி கொடுக்குமா ஹைதராபாத்..? பிளே ஆஃப்க்கு போராடும் அக்ஸர் படேல் படை!

Sunrisers Hyderabad vs Delhi Capitals: ஐபிஎல் 2025ன் 55வது போட்டியில் மே 5ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், வெப்பமான வானிலை மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளின் பிளேயிங் லெவன் மற்றும் ஹெட்-டு-ஹெட் விவரங்களும் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

IPL 2025: டெல்லிக்கு தலைவலி கொடுக்குமா ஹைதராபாத்..? பிளே ஆஃப்க்கு போராடும் அக்ஸர் படேல் படை!
அக்ஸர் படேல் - பாட் கம்மின்ஸ்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 05 May 2025 08:00 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 55வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 5ம் தேதி பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி பிளே ஆஃப் பந்தயத்திலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. அதேநேரத்தில், பிளே ஆஃப் பந்தயத்தில் தொடர்ந்து நீடிக்க, டெல்லி கேபிடல்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது முக்கியம். இந்தநிலையில், ஹைதராபாத் வானிலை எப்படி, ஸ்டேடியத்தில் பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

வானிலை எப்படி..?

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அதிக வெட்கை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நாளில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், மழைக்கான வாய்ப்பு என்பது கிடையவே கிடையாது.

பிட்ச் எப்படி..?

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. தட்டையான பிட்சை கொண்டிருப்பதால் இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதல்ல. அதேசமயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இங்கே சில உதவி கிடைக்கும். இந்தப் போட்டியில் டாஸ் மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசி, அதன்பிறகு இலக்கை துரத்தலாம்.

ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் 82 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 35 போட்டிகளிலும், 2வது பேட்டிங் செய்த அணி 47 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஹெட் டூ ஹெட்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டிகளில் 25 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஹைதராபாத் அணி 13 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், கமிந்து மெண்டிஸ், ஹர்ஷல் படேல், அனிகேத் வர்மா, ராகுல் சாஹர், ஜெய்தேவ் உனத்கட்.

டெல்லி கேப்பிடல்ஸ்:

அக்சர் படேல் (கேப்டன்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஃபாஃப் டு பிளெசிஸ், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், துஷ்மந்த் சமீரா, விபராஜ் நிகம், முகேஷ் குமார்.

தாலியை கழற்றி வைத்துவிட்டு நீட் தேர்வா? மா.சுப்பிரமணியன் கண்டனம்!
தாலியை கழற்றி வைத்துவிட்டு நீட் தேர்வா? மா.சுப்பிரமணியன் கண்டனம்!...
மாங்கல்ய பலம் அருளும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் வரலாறு!
மாங்கல்ய பலம் அருளும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் வரலாறு!...
தந்தூரி ரொட்டிக்கு வந்த போட்டியில் இரண்டு சிறுவர்கள் பரிதாப பலி!
தந்தூரி ரொட்டிக்கு வந்த போட்டியில் இரண்டு சிறுவர்கள் பரிதாப பலி!...
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் பிரபல கோலிவுட் இயக்குநர்..
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் பிரபல கோலிவுட் இயக்குநர்.....
தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள்! பல்வேறு சாதனையை குவித்த ரியான் பராக்!
தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள்! பல்வேறு சாதனையை குவித்த ரியான் பராக்!...
18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி
18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி...
கோயில் திருவிழாவில் தகராறு - 17 வயது சிறுவன் குத்தி கொலை!
கோயில் திருவிழாவில் தகராறு - 17 வயது சிறுவன் குத்தி கொலை!...
பஹல்காம் தாக்குதல் கண்டித்து தமிழ்நாட்டில் பாஜக இன்று போராட்டம்!
பஹல்காம் தாக்குதல் கண்டித்து தமிழ்நாட்டில் பாஜக இன்று போராட்டம்!...
வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!
வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர்......
மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!
மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!...