Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி? – வைராலாகும் தகவல்

Director Sundar C: 18 வருடங்களுக்கு முன்பு 1997-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்தப் படம் அருணாச்சலம். இந்தப் படத்தை இயக்கியது இயக்குநர் சுந்தர் சி ஆகும். இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணியில் படம் உருவாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தற்போது தகவல்கள் பரவி வருகின்றது.

18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி? – வைராலாகும் தகவல்
சுந்தர் சி, ரஜினிகாந்த்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 05 May 2025 09:20 AM

இயக்குநர் சுந்தர் சி (Sundar C) படங்களை இயக்குவது மட்டும் இன்றி படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார். தான் இயக்கும் படங்கிலேயே நாயகனாகவும் மற்றவர்கள் இயக்கும் படங்களில் நாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் இயக்கி நடித்தப் படம் கேங்கர்ஸ். ஆக்‌ஷன் மற்றும் காமெடியை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஏப்ரல் மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் சுந்தர் சி உடன் இணைந்து நடிகர்கள் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பகவதி பெருமாள் என பலர் நடித்துள்ளனர். சுந்தர் சி-யின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் மத கஜ ராஜா.

இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றதால் கேங்கர்ஸ் படமும் வசூலில் சாதனைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வசூலில் இந்தப் படம் சாதனைப் படைக்க தவறிவிட்டது.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தை இயக்குநர் சுந்தர் சி இயக்க உள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது. முன்னதாக இயக்குநர் கடந்த 1997-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் சௌந்தர்யா, ரம்யா, மனோரமா, வடிவுக்கரசி, ஜெய்சங்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சுந்தர் சி கூட்டணி அமையவில்லை.

இந்த நிலையில் சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனப்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வேட்டையன் படம். இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்தார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த உடனே நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் எந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றது.

அதன்படி ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க தயாராக உள்ளது என்றும் இயக்குநர்கள் சுந்தர் சி அல்லது கார்த்தில் சுப்பராஜ் தான்  இயக்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி சுந்தர் சி இந்தப் படத்தை இயக்கினால் 18 வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி அமைவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?...
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண் - வைரல் வீடியோ!
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண் - வைரல் வீடியோ!...
வெயிலுக்கு குட் பை.... இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்...
வெயிலுக்கு குட் பை.... இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்......
Skype செயலியை மூடிய மைக்ரோசாப்ட் - Alternatives இதோ!
Skype செயலியை மூடிய மைக்ரோசாப்ட் - Alternatives இதோ!...
பிளே ஆஃப் பந்தயத்தில் 8 அணிகள்! KKR-க்கு உள்ளே வர வாய்ப்புள்ளதா?
பிளே ஆஃப் பந்தயத்தில் 8 அணிகள்! KKR-க்கு உள்ளே வர வாய்ப்புள்ளதா?...
பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்
பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்...
வேண்டியது நிறைவேறுமாம்! - மாசாணியம்மன் கோயில் ஸ்பெஷல்!
வேண்டியது நிறைவேறுமாம்! - மாசாணியம்மன் கோயில் ஸ்பெஷல்!...
நடிகர் தனுஷ் படத்தில் இணையும் நடிகர் பிரகாஷ் ராஜ் - அப்டேட் இதோ!
நடிகர் தனுஷ் படத்தில் இணையும் நடிகர் பிரகாஷ் ராஜ் - அப்டேட் இதோ!...
திருமணமாகாத, மனைவியை இழந்த ஆண்களுக்கு மாதம் ரூ.5,000!
திருமணமாகாத, மனைவியை இழந்த ஆண்களுக்கு மாதம் ரூ.5,000!...
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்.. இலங்கைக்கு தப்ப முயற்சியா..?
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்.. இலங்கைக்கு தப்ப முயற்சியா..?...
பிரச்னைகள் தீரும்.. சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
பிரச்னைகள் தீரும்.. சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!...