Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருமணமாகாத, மனைவியை இழந்த ஆண்களுக்கு மாதம் ரூ.5,000.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

New Pension Scheme for Unmarried and Widowed Men | பெண்களுக்கான ஏராளமான சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், ஆண்களுக்கு பயனளிக்கும் அசத்தலான திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் திருமணமாகாத ஆண்கள் மற்றும் மனைவியை இழந்த ஆண்கள் பயன்பபெறலாம்.

திருமணமாகாத, மனைவியை இழந்த ஆண்களுக்கு மாதம் ரூ.5,000.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 05 May 2025 12:51 PM

திருமணமாகாத ஆண்கள் (Unmarried Men) மற்றும் மனைவியை இழந்த ஆண்களுக்கு (Widowed Men) உதவும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய பென்ஷன் திட்டத்தை (Pension Scheme) அறிமுகம் செய்துள்ளது. பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில், ஆண்களுக்கான சிறப்பு திட்டங்கள் ஏன் அறிமுகம் செய்யப்படுவதில்லை என்ற ஏக்கம் ஆண்கள் மத்தியில் இருந்து வந்தது. தற்போது அதனை தீர்க்கும் விதமாக மத்திய அரசின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த புதிய பென்ஷன் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆண்களுக்கான பிரதேயக பென்ஷன் திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு

தமிழக அரசு பெண்களுக்கான பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டம், மாதம் ரூபாய் 1,000 ஊக்கத்தொகை என பல திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதே போல ஆந்திரா, தெலுங்கானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கான பிரத்தியேக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாநில அரசுகள் மட்டுமன்றி மத்திய அரசும் பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. செல்வமகள் சேம்பு திட்டம் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவ்வாறு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அவர்கள் பயன்பெறும் வகையிலும் பல வகையான திட்டங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஆண்களுக்கான சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத ஏக்கம் ஆண்கள் மத்தியில் நிலவி வந்தது. தற்போது அதனை பூர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

இந்த சிறப்பு திட்டத்தில் யார் யார் பயன்பெறலாம்

ஆண்களுக்கான பிரத்யேக பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் திருமணமாகாத மற்றும் மனைவியை இழந்த ஆண்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ஆண்கள் பயனடைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மேற்குறிப்பிட்ட தகுதியுடைய ஆண்களுக்கு மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஆண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக கருதப்படுகின்றனர். மேலும், இந்த திட்டத்திற்கு குறைந்த மாத ஊதியம் கொண்ட ஆண்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், அவர்களிடம் ஆதார் கார்டு, வருமான சான்றிதழ், மனைவியின் இறப்பு சான்றிதழ், உள்ளிட்டவை கட்டாயம் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க State Social Welfare இணையதளத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள Widowed Men திட்டத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னால் கார்த்தி மாதிரி நடிக்க முடியாது - நடிகர் சூர்யா ஓபன் டாக்
என்னால் கார்த்தி மாதிரி நடிக்க முடியாது - நடிகர் சூர்யா ஓபன் டாக்...
முருகன் அருளால் சுஜாதா வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவம்!
முருகன் அருளால் சுஜாதா வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவம்!...
உடல் எடை குறைப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்க இயற்கையான தீர்வு!
உடல் எடை குறைப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்க இயற்கையான தீர்வு!...
இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? – எம்.பி. வெங்கடேசன் கேள்வி
இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? – எம்.பி. வெங்கடேசன் கேள்வி...
ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?
ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?...
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?...
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?...
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை...
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!...
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?...
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண் - வைரல் வீடியோ!
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண் - வைரல் வீடியோ!...