Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

என்னால் கார்த்தி மாதிரி நடிக்க முடியாது – நடிகர் சூர்யா ஓபன் டாக்!

Actor Suriya: சமீபத்தில் ஒரு கலந்துரையாடலில் நடிகர் சூர்யா தனது தம்பி நடிகர் கார்த்தி மாதிரி தன்னால் நடிக்க முடியாது என்றும், கார்த்தி நடித்த மெய்யழகன் படத்தை தன்னால் ஒருபோது பன்ன முடியாது என்றும் வெளிப்படையாக பேசியது தற்போது ரசிகரக்ளிடையே வைரலாகி வருகின்றது.

என்னால் கார்த்தி மாதிரி நடிக்க முடியாது – நடிகர் சூர்யா ஓபன் டாக்!
நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 May 2025 16:51 PM

நடிகர் சூர்யா (Actor Suriya) நீண்ட நாட்களாக தான் நடிக்கும் படங்களில் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தப் படம் ரெட்ரோ. சூர்யாவின் 44-வது படமான இதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthik Subbaraj) இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர்கள் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், சுவாசிகா மற்றும் அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திரைப்பட விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனத்தையே அளித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் பாடலின் நடன அசைவுகளை பலர் ரீ கிரியேட் செய்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக படக்குழு பல புரமோஷன் பணிகளில் ஈடுபட்டது. அதில் ஒரு பகுதியாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் சூர்யா மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

கார்த்தி குறித்து சூர்யா சொன்னது என்ன?

அப்போது பேசிய நடிகர் சூர்யா தன்னை ஒரு சிறந்த நடிகராகக் கருதுவதில்லை என்று தெரிவித்தார். மேலும் சில சமயங்களில் நடிகர் சூர்யா தனது நடிப்பு மிகையாக இருப்பது போல தோன்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து நடிகர் தனது சகோதரர் நடிகர் கார்த்தியுடன் தன்னை ஒப்பிட்டு பேசினார்.

அப்போது நடிகர் சூர்யா கூறியதாவது என்னால் கார்த்தியை போல ஒருபோதும் இருக்க முடியாது என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் போன்ற ஒரு படத்தைத் தன்னால் ஒருபோதும் நடிக்க முடியாது என்பதை சூர்யா ஓபனாக பேசியது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான மெய்யழகன்:

மேலும் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் மெய்யழகன். இயக்குநர் பிரேம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் கார்த்தி உடன் இணைந்து நடிகர்கள் அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண் சக்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழில் வெளியான சிறந்த ஃபீல் குட் படமாக இந்த மெய்யழகன் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் எப்போது தொடங்கும்?
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் எப்போது தொடங்கும்?...
சிம்புவின் STR 49 படத்தில் சந்தானம் காமெடியனா? இயக்குநர் விளக்கம்
சிம்புவின் STR 49 படத்தில் சந்தானம் காமெடியனா? இயக்குநர் விளக்கம்...
தவெக தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர், நடந்தது என்ன?
தவெக தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர், நடந்தது என்ன?...
அமேசானில் அதிரடி தள்ளுபடி விலையில் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்!
அமேசானில் அதிரடி தள்ளுபடி விலையில் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்!...
போட்ல செல்ல ஆசையா? அப்போ கன்னியாகுமரிக்கு போங்க..!
போட்ல செல்ல ஆசையா? அப்போ கன்னியாகுமரிக்கு போங்க..!...
அடுத்தடுத்து வந்த இ-மெயில்! முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்..!
அடுத்தடுத்து வந்த இ-மெயில்! முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்..!...
கொடைக்கானலில் விஜய்யின் 'ஜன நாயகன்' ஷூட்டிங் ஓவர்!
கொடைக்கானலில் விஜய்யின் 'ஜன நாயகன்' ஷூட்டிங் ஓவர்!...
திண்டுக்கல்-நாகர்கோவில் கோடை சிறப்பு ரயில்: அட்டவணை விவரம் இதோ!
திண்டுக்கல்-நாகர்கோவில் கோடை சிறப்பு ரயில்: அட்டவணை விவரம் இதோ!...
பாகிஸ்தானியர்களால் ஹேக் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு தளங்கள்
பாகிஸ்தானியர்களால் ஹேக் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு தளங்கள்...
ராகு - கேது பெயர்ச்சி எப்போது? - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
ராகு - கேது பெயர்ச்சி எப்போது? - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!...
சனிப்பிரதோஷம் விரதம்.. வீட்டிலேயே மேற்கொள்வது எப்படி?
சனிப்பிரதோஷம் விரதம்.. வீட்டிலேயே மேற்கொள்வது எப்படி?...