Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Santhanam : சிம்புவின் ‘STR 49’ படத்தில் சந்தானம் காமெடியனா? இயக்குநர் கொடுத்த விளக்கம்!

Santhanams Character In STR49 : கோலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளுக்குப் பின் நடிகர்கள் சிம்பு மற்றும் சந்தானத்தின் கூட்டணியில் உருவாகிவரும் படம் STR 49. இந்த படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், அதை தொடர்ந்து நடிகர் சந்தானத்தின் கதாபாத்திரம் பற்றி இயக்குநர் அப்டேட் கொடுத்துள்ளார்.

Santhanam : சிம்புவின் ‘STR 49’ படத்தில் சந்தானம் காமெடியனா? இயக்குநர் கொடுத்த விளக்கம்!
சிலம்பரசன் மற்றும் சந்தனம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 05 May 2025 19:56 PM

இயக்குநர் மணிரத்னத்தின் தக் லைப்  (Thug Life) படத்தைத் தொடர்ந்து,  நடிகர் சிலம்பரசன் (SIlambarasan) நடித்துவரும் படம் STR 49. இந்த படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan)  இயக்கிவருகிறார். இவர் நடிகர் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் வெளியான பார்க்கிங் படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, சிலம்பரசனுடன் STR 49 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ்  (Dawn Pictures) நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் நடிகர்கள் சிம்பு மற்றும் சந்தானத்தின் (Santhanam) கூட்டணி இணைந்துள்ளது . இவர்கள் இருவரின் காமினேஷனில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது என்றே கூறலாம். நடிகர் சந்தானம், சில ஆண்டுகளாகக் கதாநாயகனாக மட்டும்தான் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவிற்காக நடிக்கப்போவதாக ஒரு பேட்டியில் கூட சொல்லியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சந்தானம் இந்த படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்கிறாரா எனப் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு விளக்கம் கொடுக்கும் படியாக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா பதிலளித்திருக்கிறார். அவர் நிகழ்ச்சி ஒன்றில் STR 49 படத்தில் நடிகர் சந்தனமும் 2வது ஹீரோவாக நடிக்கிறார் என்றும், காமெடியனாக அல்ல ஆக்ஷ்ன் நடிகராக நடிப்பார் என்றும் கூறியிருக்கிறார். இந்த தகவலானது இணையத்தில் தியாகி பரவி வருகிறது.

STR 49 இயக்குநர் கூறிய விஷயம் :

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் “நடிகர் சந்தானம் இந்த STR 49 படத்தில் இரண்டாவது லீட் ரோலில் நடிக்கிறார். இவரின் கதாபாத்திரமும் இந்த படத்தில் முக்கிய ஆக்ஷ்ன் ரோலாக இருக்கும். நடிகர் சந்தானத்தை இந்த படத்தில் நகைச்சுவைக்காகப் பயன்படுத்தவில்லை. நான் ஏற்கனவே நடிகர் சந்தானத்துடன் டிக்கிலோனா என்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். எனவே எனக்கும் , அவருக்கு ஒரு நல்ல நட்புறவு இருக்கிறது. மேலும் நடிகர் சிம்புவும், பிரமாதமான நட்புறவை சந்தனத்துடன் வைத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதன் காரணமாகத்தான் நடிகர் சந்தானம் இந்த படத்தின் கதையைக் கேட்பதற்கு ஓத்துக்கொண்டார், அதைத் தொடர்ந்து கதையைக் கேட்ட சந்தானம் நிச்சயமாக இந்த படத்தில் நடிப்பேன்” என்று கூறினார் என இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்

STR 49 படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் சிலம்பரசனின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்தது வருகிறார். இந்த படமானது கல்லூரி சார்ந்த கதைக்களத்துடன் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிலம்பரசன் மாணவன் போல மாறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜைகள் கடந்த 2025, மே 3ம் தேதியில் சிறப்பாக நடந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முடி உதிர்தலுக்கான காரணம் என்ன ? இந்த அறிகுறிகள் இருக்கிறதா?
முடி உதிர்தலுக்கான காரணம் என்ன ? இந்த அறிகுறிகள் இருக்கிறதா?...
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்!
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்!...
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?...
18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! புது சாதனை படைத்த கம்மின்ஸ்!
18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! புது சாதனை படைத்த கம்மின்ஸ்!...
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!...
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!...
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்...
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!...
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!...
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !...
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!...