Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Santhanam : எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்.. மேடையில் உருக்கமாகப் பேசிய சந்தானம்!

Santhanam Praised Silambarasan : நடிகர் சந்தானத்தின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படமானது வரும் 2025, மே 16ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்புவும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய சந்தானம் நடிகர் சிலம்பரசனை பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார்

Santhanam : எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்.. மேடையில் உருக்கமாகப் பேசிய சந்தானம்!
சந்தானம் மற்றும் சிலம்பரசன் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 05 May 2025 22:37 PM

தமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலம் நடிகராக அறிமுகமானவர்களில் ஒருவர் சந்தானம் (Santhanam). இவர் ஆரம்பத்தில் லொள்ளு சபா (Lollu Sabha) என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகராக நடித்தது வந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் சிம்புவின் (Simbu) மன்மதன் (Manmadhan) படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தின் கதை எழுதியிருந்தார். மேலும் படத்தையும் இவரும் இணைந்து இயக்கினார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில்தான் நடிகர் சந்தானம், சிம்புவின் நண்பனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தனக்கு நடிக்கும் வாய்ப்பையே சிம்புதான் வழங்கினார் என்று, பல நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அந்த வகையில் நடிகர் சந்தானம் சிறந்த மனிதர் என்று கூறலாம். தனக்கு சினிமா வாய்ப்பை கொடுத்தவரை இன்றுவரை மறக்காமல் இருக்கிறார்.

மேலும் நடிகர் சந்தானம் தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தற்போத ரிலீசிற்கு காத்திருக்கும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level) . இந்த படமானது தில்லுக்கு துட்டு என்ற படத்தொகுப்பின் 4வது பாகமாக , வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, மே 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசனும் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் மேடையில் பேசிய சந்தானம் ‘சிம்பு இல்லை என்றால் நான் இல்லை, எப்போதுமே அவர் மற்றவர்மீது அதிகம் அக்கறைப் படுவார். என்னிடமும் அப்படித்தான், நான் எப்போது சிம்புவின் பின்னல் நிற்பேன் என்று உருக்கமாகப் பேசியுள்ளார். இது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

STR 49 படக்குழு வெளியிட்ட பதிவு :

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் நிகச்சியில் சந்தானத்தின் உருக்கமான பேச்சு :

படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்,  பேசிய சந்தானம் “நான் இந்த இடத்தில் நிற்பதற்குக் காரணமே சிம்புதான், அவர் இல்லை என்றால் நான் இல்லை. இந்த விஷயத்தை நான் பல மேடைகளில் சொல்லியிருக்கிறேன், இனியும் சொல்லுவேன். மன்மதன் படத்தில் எனது முதல் நாள் ஷூட்டிங்கில் எனக்கு ஒரு ஓப்பனிங் காட்சி வைக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். அப்போதே எனக்கு திரையில் நல்ல வரவேற்பு கிடைக்கவேண்டும் என எனக்கு மன்மதன் படத்தில் ஒரு ஓப்பனிங் ஷாட் வைத்திருந்தார். அப்போதிலிருந்தே என்மீது அதிகம் அக்கறைகொண்டவர் சிம்பு.

அந்த அக்கறை இன்றுவரை அவரிடம் இருந்து குறையவில்லை, தற்போது நடிக்கப்போகும் STR 49 படத்தில் கூட எனது கதாபாத்திரம் நன்றாக இருக்கவேண்டும் என இயக்குநரிடம் பலமுறை கூறியுள்ளார் அதை நானும் பார்த்திருக்கிறேன். இப்போதும் எனது கதாபாத்திரம் நன்றாக வரவேண்டும் என்றுதான் அவர் நினைத்திருந்தார். இப்படிப்பட்ட அன்பும், ஆதரவும் என இப்படிப்பட்ட ஒருவர் எனக்குக் கிடைத்தே கடவுளுக்கு நன்றி சொல்லனு, ஐ லவ் யு சிம்பு” என நடிகர் சந்தானம் மேடையில் உருக்கமா

DCvSRH : ஹைதராபாத்தில் அதிரடியாக ஆடிய மழை - போட்டி ரத்து!
DCvSRH : ஹைதராபாத்தில் அதிரடியாக ஆடிய மழை - போட்டி ரத்து!...
முடி உதிர்தலுக்கான காரணம் என்ன ? இந்த அறிகுறிகள் இருக்கிறதா?
முடி உதிர்தலுக்கான காரணம் என்ன ? இந்த அறிகுறிகள் இருக்கிறதா?...
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்!
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்!...
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?...
18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! புது சாதனை படைத்த கம்மின்ஸ்!
18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! புது சாதனை படைத்த கம்மின்ஸ்!...
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!...
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!...
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்...
வீடியோவுக்காக பேன்டில் தீ பற்ற வைத்த நபர் - வைரலாகும் ஷாக் வீடியோ
வீடியோவுக்காக பேன்டில் தீ பற்ற வைத்த நபர் - வைரலாகும் ஷாக் வீடியோ...
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!...
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!...