OTT Review : வீட்டினுள் பிணமாக இருக்கும் பெண்.. இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?
Tamil Suspense Thriller Movie : கோலிவுட் சினிமாவில் கடந்த 2025 மார்ச் மாதத்தில் வெளியாகி எதிர்பாராத வரவேற்பைப் பெற்ற திரைப்படம் எமகாதகி. இந்த படத்தை அறிமுக இயக்குநர் பெபின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியிருந்தார். முற்றிலும் மர்ம கதைக்களத்துடன் வெளியான இந்த படத்தினை நிச்சயம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இருக்கும். இந்த படத்தைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

தமிழில் ரசிகர்கள் திரையரங்குகளில் படங்களைச் சென்று பார்ப்பதைவிட ஓடிடி (OTT) (Over The Top) இணையதளங்களில் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். திரையரங்குகளில் (theaters) படங்கள் அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறாவிட்டாலும் ஓடிடியில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. திரையரங்குகளில் ஓடாத படங்கள் கூட ஓடிடியில் டாப் ரேட்டிங்கில் (Top rated on OTT) இருக்கிறது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவுள்ள படம் எமகாதகி (Yamakaathaghi). இந்த படத்தை அறிமுக இயக்குநர் பெபின் ஜார்ஜ் ஜெயசீலன் (Pepin George Jayaseelan) இயக்கியுள்ளார். இந்த படமானது முற்றிலும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது.
இந்த படமானது கடந்த 2025, மார்ச் 7ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இது சிறிய பட்ஜெட் மற்றும் அறிமுக நடிகர்களின் படம் என்பதால் ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியிருந்தது. அதனால் இந்த படமானது அனைத்து தரப்பு மக்களிடையே சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் மிஷ்கினின் பிசாசு படத்தைத் தொடர்ந்து, ஒரு ஆவியை அழகாக காட்டிய படமாக இந்த எமகாதகி திரைப்படம் இருக்கும். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ரூபா கொடுவாயூர் நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமான முதல் படமாகும். இந்த படத்தில் இவர் ஒரு சில காட்சிகளைத் தவிரப் படத்தில் முழுக்க முழுக்க பிணமாகவேதான் இவர் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத் நடித்திருந்தார். இந்த எமகாதகி படத்தின் கதைக்களம் பற்றிப் பார்க்கலாம்.
எமகாதி திரைப்படத்தின் கதைக்களம் :
இந்த திரைப்படத்தில் நடிகை ரூபா கொடுவாயூர் லீலா என்ற கதாபாத்திரத்திலும், அன்புவாக நரேந்திர பிரசாத்தும் நடித்திருந்தனர். எமகாதகி படத்தில் லீலா பிறந்ததிலிருந்தே ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர். குளிர்காலத்திலும் அல்லது காற்று அதிகம் வீசும் இடத்திலும் இருந்தால் அவருக்கு மூச்சடைக்கும், அதன் காரணமாக வீட்டினுள் இருக்கிறார். அவரின் வீட்டில் ஒரு மர்மமான அரை ஒரு இருக்கிறது, அந்த சரியானது அவரின் பாடி காலத்தில் இருந்தே பூட்டப்பட்டு இருக்கிறது.
அந்த அறையைத் திறந்தாள் வீட்டில் அசம்பாவிதங்கள் நடக்கும் என்ற காரணத்தால் பல வருடங்களாக மூடியே இருக்கிறது. மேலும் அந்த அறையில் இருந் மோசமான நாற்றம் வந்த நிலையில், கத்தியின் நாயகி லீலா கதவை உடைத்துத் திறக்கிறார். அந்த கதவு திறந்த மறுநாளே அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடக்கிறார். அவர் எவ்வாறு இறந்தார், அவரின் இறப்பு கொலையா ? அல்லது தற்கொலையா? அந்த அறையின் மர்மம் என்ன என்பதுதான் மீதி கதையாகும். இந்த படத்தின் கதியானது மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும்.
எந்த ஓடிடியில் உள்ளது ?
இந்த எமகாதகி திரைப்படமானது ஆஹா ஓடிடி இணையதளத்தில் உள்ளது. மேலும் ஐஎம்டிபி ரேட்டிங் படி 10க்கு 6.9 என்ற கணக்கில் உள்ளது. நிச்சயமாக குடும்பத்துடன் பார்ப்பதற்கு இந்த படமானது அருமையாக இருக்கும். வீக் எண்டில் இந்த படத்தை மறக்காமல் பாருங்கள்.