Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

போட்ல செல்ல ஆசையா? அப்போ கன்னியாகுமரிக்கு போங்க..!

Kanyakumari Boat Trip: கன்னியாகுமரியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டக்கோட்டைக்கு புதிய சொகுசு படகுச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 75 பயணிகளைச் சுமக்கும் திறன் கொண்ட இந்தப் படகு, ஒரு மணி நேரக் கடல் பயணத்தை வழங்குகிறது. ரூ.450 கட்டணத்தில், கடலின் அழகையும் கோட்டையின் வரலாற்றையும் அனுபவிக்கலாம். சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை இது வழங்கும்.

போட்ல செல்ல ஆசையா? அப்போ கன்னியாகுமரிக்கு போங்க..!
வட்டக்கோட்டைக்கு சொகுசு படகு சேவை மீண்டும் தொடக்கம்Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 05 May 2025 19:10 PM

கன்னியாகுமரி மே 05: கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. வார இறுதிகளில் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு திரண்டு வருகிறார்கள். இப்போது, கன்னியாகுமரியில் இருந்து 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வட்டக்கோட்டைக்கு சொகுசு படகு சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படகு, 75 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியதாகவும், ஒரு மணி நேர கடல் பயண அனுபவம் வழங்குவதாகவும் உள்ளது. கட்டணம் ரூ.450 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை, சுற்றுலா பயணிகளுக்கு கடலின் அழகும் கோட்டையின் வரலாறும் ஒரே நேரத்தில் அனுபவிக்க ஒரு மறக்க முடியாத வாய்ப்பாக இருக்கிறது.

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலம் கன்னியாகுமரி

கன்னியாகுமரி, அதன் இயற்கை அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தால் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. தினசரி தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலக நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். வார இறுதி மற்றும் தொடர் விடுமுறைகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

பிரபல இடங்களில் கூட்டம் அதிகம்

காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் திரண்டிருப்பது வழக்கமாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட கடலோர முக்கிய இடங்களையும் காண உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வருகை தருகிறார்கள்.

வட்டக்கோட்டைக்கு சொகுசு படகு சேவை மீண்டும் தொடக்கம்

இந்தத் தொடரில், கன்னியாகுமரியில் இருந்து வரலாற்று சிறப்பு மிக்க வட்டக்கோட்டைக்கு சொகுசு படகு சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை, அதன் வட்ட வடிவ அமைப்பினால் “வட்டக்கோட்டை” என அழைக்கப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக விளங்குகிறது.

புதிய வசதிகளுடன் பயண அனுபவம்

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் புதிய வசதிகளுடன் கூடிய படகு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் நான்கரை நாட்டிக்கல் மைல் கடல் தூரத்தை பயணிக்கின்ற இந்த படகு, ஒரே நேரத்தில் 75 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட இந்த பயண சேவையின் கட்டணம் ஒருவருக்கு ரூ.450 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மணி நேர கடல் பயணம், சுற்றுலா பயணிகளுக்கு கடல் அழகும், கோட்டையின் வரலாற்றும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வாய்ப்பு அளிக்கிறது.

மறக்க முடியாத அனுபவமாகும் என எதிர்பார்ப்பு

இந்த புதிய படகு சேவை, சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. கடலின் இயற்கை அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவமுள்ள வட்டக்கோட்டையின் தனித்துவம் ஆகியவை ஒன்றாகும் இந்த பயணம், சுற்றுலா பயணிகளின் நினைவில் நீடிக்கும் ஒரு அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!...
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!...
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்...
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!...
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!...
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !...
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!...
மே 5 ஆம் தேதியை "வர்த்தகர்கள் நாள்" ஆக அறிவித்தார் முதல்வர்
மே 5 ஆம் தேதியை
ஒற்றைத் தலைவலியின் ஆரம்ப அறிகுறிகள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்
ஒற்றைத் தலைவலியின் ஆரம்ப அறிகுறிகள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்...
ரோலக்ஸ் ரோலில் நடிப்பதற்குக் காரணம் அந்த வெறிதான்- சூர்யா!
ரோலக்ஸ் ரோலில் நடிப்பதற்குக் காரணம் அந்த வெறிதான்- சூர்யா!...
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு...