Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Home Cleaning Guide: தூசி அதிகமாக ஆக்கிரமிப்பு செய்கிறதா..? இதை செய்தால் வீடு சுத்தமாகும்!

Keep Your Home Dust-Free: வீட்டில் தூசி அலர்ஜியால் அவதிப்படுபவர்களுக்கு இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏசி, கூலர் வடிகட்டிகளை சுத்தம் செய்வது, காற்று சுத்திகரிப்பான் பயன்படுத்துவது, துடைப்பதைத் தவிர்த்து ஸ்ப்ரே பயன்படுத்துவது, வேக்கம் கிளீனர் பயன்படுத்துவது மற்றும் படுக்கையை அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற எளிமையான வழிகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது. தூசி அலர்ஜியைத் தவிர்க்க இந்த எளிய படிகள் உதவும்.

Home Cleaning Guide: தூசி அதிகமாக ஆக்கிரமிப்பு செய்கிறதா..? இதை செய்தால் வீடு சுத்தமாகும்!
தூசியை சுத்தம் செய்யும் முறைImage Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 04 May 2025 18:37 PM

வீட்டில் ஒவ்வொரு இடங்களும் சுத்தமாக இருப்பது அவசியம். அலுவலக வேலைகளுடன், பலரும் வீட்டு வேலைகளின் சுமைகளையும் சுமக்கிறார்கள். நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி இட வசதிக்காக பெரும்பாலான மக்கள் மரங்களை (Tree) வெட்டுகின்றன. அந்த இடங்களில் அதிகபடியான கட்டுமான பணிகளும் நடைபெறுகிறது. இந்த கட்டுமானப் பணிகளின் காரணமாக அக்கம்பக்கத்தில் இருக்கும் வீடுகள் எப்படி பூட்டி வைத்தாலும் தூசி(Dust) அடைய தொடங்குகிறது. நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்திலோ யாராக்காவது தூசி என்றால் அலர்ஜி என்றால், கவனமுடன் இருப்பது முக்கியம். அதன்படி, அவ்வபோது தூசியை சுத்தம் செய்வது முக்கியமானது. எனவே, வீட்டிற்குள் வரும் தூசியை எப்படி சுத்தம் செய்வது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ஏசி மற்றும் ஏர்கூலர்களை சுத்தம் செய்தல்:

உங்கள் வீட்டிற்குல் தூசி இல்லாமல் இருக்க வேண்டுமென்றால், வீட்டில் பயன்படுத்தப்படும் ஏசி மற்றும் கூலர்களில் உள்ள வடிகட்டிகளை மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வது, 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவது நல்ல வழி. இவை விலை குறைந்தவைதான். இது உங்கள் வீட்டில் உள்ள தூசியை தனக்குள் எடுத்துகொண்டு சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை குறைக்கும்.

காற்று சுத்திகரிப்பான் வாங்குதல்:

உங்கள் வீட்டிற்குள் அடிக்கடி தூசி படிகிறது என்றால், நீங்கள் கடைகளில் கிடைக்கும் காற்று சுத்திகரிப்பானை வாங்கலாம். இதை வாங்கி வீட்டிற்குள் வைக்கும்போது, காற்றிலிருக்கும் தூசியை தானாகவே வடிக்கட்டி தூய காற்றை வெளியிடும். அதாவது, இது வீட்டிற்குள் 90 முதல் 95 சதவீதம் வரை தூசி இல்லாமல் வைக்கும். உங்களுக்கு அடிக்கடி வீட்டை சுத்தம் செய்ய நேரம் இல்லையென்றால், இது உங்களுக்கு சிறந்த பலனை தரும்.

துடைப்பதை தவிருங்கள்:

உங்களுக்கு தூசி அலர்ஜி என்றால், தூசிகளை துணியை கொண்டோ அல்லது துடைப்பான்களை கொண்டோ சுத்தம் செய்யாமல், வேக்கம் கிளீனரை பயன்படுத்தலாம். அப்படி இது இல்லையென்றால், ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 கிளாஸ் தண்ணீர் மற்றும் 4 ஸ்பூன் வினிகரை ஊற்றி, நீங்கள் சுத்தம் செய்ய விரும்பும் இடத்தில் தெளித்து கொள்ளுங்கள். அதன்பின், துடைப்பான்களை கொண்டு துடைக்கலாம். இது தூசி நேரடியாக உங்கள் மூக்கிற்குள் செல்வதை தடுக்கும்.

வேக்கம் கிளீனர்:

உங்கள் ஆரோக்கியம் பராமரிக்க வேண்டுமென்றால் முடிந்தவரை வேக்கம் கிளீனரை கொண்டு சுத்தம் செய்வது நல்லது. அதன்படி படுக்கைகள், சோபா, வீட்டின் திரைச்சீலைகள், அலமாரிகள், கதவிகள் போன்றவற்றை வேக்கம் கிளீனரை பயன்படுத்தில் சுத்தம் செய்யலாம். இதன் மூலம், நீங்கள் குறைந்த நேரத்தில் வீட்டை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், தூசி உங்களை தொந்தரவு செய்யாமல் தடுக்கும்.

படுக்கையை சுத்தம் செய்தல்:

இரவு தூங்குவதற்கு முன்பும் சரி, தூங்கி எழுந்த பிறகும் சரி படுக்கை மற்றும் தலையணை தட்டி சுத்தம் செய்வது நல்லது. ஏனெனில், தூசி, மண், உடல் வியர்வை, முடி போன்றவற்றை உங்கள் ஆரோக்கியத்தை சுத்தம் செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு வாரமும் அவற்றை முழுவதுமாக சுத்தம் செய்வது மிகவும் முக்கியம்.

அந்த மாதிரி படங்களை தவிர்பதற்கு காரணம் இது தான் - நடிகர் மாதவன்
அந்த மாதிரி படங்களை தவிர்பதற்கு காரணம் இது தான் - நடிகர் மாதவன்...
சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற மாடு - வைரல் வீடியோ!
சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற மாடு - வைரல் வீடியோ!...
நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்க... ராஷ்மிகா
நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்க... ராஷ்மிகா...
பராக்கின் 95 ரன்கள் வீண்.. KKR 1 ரன்னில் த்ரில் வெற்றி..!
பராக்கின் 95 ரன்கள் வீண்.. KKR 1 ரன்னில் த்ரில் வெற்றி..!...
6 பாடங்களிலும் தோல்வி.. கேக் வெட்டி ஊட்டி விட்ட பெற்றோர்கள்..!
6 பாடங்களிலும் தோல்வி.. கேக் வெட்டி ஊட்டி விட்ட பெற்றோர்கள்..!...
ஜன நாயகன் ஷூட்டிங்... ரசிகர்களை பார்க்க ஜீப்பில் வந்த விஜய்...
ஜன நாயகன் ஷூட்டிங்... ரசிகர்களை பார்க்க ஜீப்பில் வந்த விஜய்......
ராயன் படப் பாடலை மேடையில் பாடி அசத்திய தனுஷ் - ஏ.ஆர். ரஹ்மான்!
ராயன் படப் பாடலை மேடையில் பாடி அசத்திய தனுஷ் - ஏ.ஆர். ரஹ்மான்!...
கிஸ் பட டைட்டில் உரிமை.. கேட்டவுடன் கொடுத்த பிரபல இயக்குநர்!
கிஸ் பட டைட்டில் உரிமை.. கேட்டவுடன் கொடுத்த பிரபல இயக்குநர்!...
ஆக்ரோஷமாகி ஊழியர்களை தாக்கிய ரோபோட் - வைரல் வீடியோ!
ஆக்ரோஷமாகி ஊழியர்களை தாக்கிய ரோபோட் - வைரல் வீடியோ!...
100 கோடி வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் புதிய ECINET செயலி!
100 கோடி வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் புதிய ECINET செயலி!...
தூசி அதிகமாக ஆக்கிரமிப்பு செய்கிறதா..? இதை செய்தால் வீடு க்ளீன்!
தூசி அதிகமாக ஆக்கிரமிப்பு செய்கிறதா..? இதை செய்தால் வீடு க்ளீன்!...