பாகிஸ்தானியர்களால் ஹேக் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு தளங்கள் – அதிர்ச்சி தகவல்
Pakistan Hackers Target India : பாகிஸ்தானை சேர்ந்த 'Pakistan Cyber Force' என்ற ஹேக்கர் குழு, இந்திய பாதுகாப்புத் தளங்களை ஹேக் செய்து முக்கிய தரவுகளை திருடியதாக அறிவித்திருக்கிறது. மிலிட்டரி எஞ்சினியரிங் சர்வீசஸ் மற்றும் மனோஹர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுத் தளத்தின் தகவல்கள் திருடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காமில் (Pahalgam) நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான்(Pakistan) ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் இந்திய பாதுகாப்பு தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் சைபர் ஃபோர்ஸ் Pakistan Cyber Force என்ற எக்ஸ் பக்கத்தில் இந்திய இராணுவ இணையதளங்களை ஹேக் செய்ததாகவும், முக்கிய தரவுகளை கையகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.இந்த குழு, மிலிட்டரி எஞ்சினியரிங் சர்வீசஸ் (Military Engineer Services) மற்றும் மனோஹர் பரிக்கர் பாதுகாப்பு ஆய்வுத் தளம் (Manohar Parrikar Institute of Defence Studies and Analysis) ஆகியவற்றின் தரவுகளை ஹேக் செய்ததாகக் கூறியுள்ளது.
மேலும், ஆர்மர்டு வைக்கில் நிகம் லிமிடெட் (Armoured Vehicle Nigam Limited) என்ற அரசு நிறுவனத்தின் இணையதளத்தை அழிக்க முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த இணையதளம் தற்போது பாதுகாப்பு பரிசோதனைக்காக தற்காலிகமாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட இந்திய இணையதளங்கள்
🚨 Pakistan Cyber Force claims breach of Indian Military Eng. Service & Manohar Parrikar Inst., allegedly accessing sensitive data.
Also defaced Armoured Vehicle Nigam Ltd site with Pak flag & Al Khalid tank. Site offline for audit.
Cybersecurity teams on high alert. pic.twitter.com/42CxDdXMzX
— Akash Sharma (@kaidensharmaa) May 5, 2025
ஹேக்கர்கள் வெளியிட்ட புகைப்படங்களில், இந்திய டேங்க் உள்ள இடத்தில் பாகிஸ்தான் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய பாதுகாப்புப் பணியாளர்களின் பெயர்கள் உள்ளிட்ட டேட்டாக்களுடன் ‘Hacked. Your security is illusion. MES data owned’ என்ற செய்தியுடன் ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளனர். அவர்கள் 1,600 பயனாளிகளுக்கான 10 GB க்கும் மேற்பட்ட டேட்டாக்களையும் திருடியதாகவும் கூறியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு கமாண்டோ பயிற்சி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அரசின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு கமாண்டோ போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் சிறப்பு சேவை குழு (SSG) கமாண்டோக்களைப் போல பயிற்சி அளிக்கப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் 15 முதல் 20 வரை இதுபோன்ற தளபதிகள் இருப்பதாகவும் அவர்கள் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சிறிய குழுக்களை வழிநடத்துகிறார்கள் எனவும் தெரிய வந்திருக்கிறது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய தடை
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அட்டாரி – வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் திறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், பாகிஸ்தானியர்களின் விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்த இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. மேலும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதிக்கு இந்திய அரசு தடை விதிதித்திருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து நேரடி இறக்குமதி செய்தவதற்கு தடைவிதித்திருக்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனுக்காக இத்தகைய தடை விதிக்கப்பட்டிருப்பதாக அரசு விளக்கமளித்துள்ளது.