Pahalgam Terror Attack: பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்.. இலங்கைக்கு தப்ப முயற்சியா..? சென்னை விமான நிலையத்திற்கு வந்த எச்சரிக்கை!
Chennai Airport Threat: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பேர் இலங்கை விமானத்தில் இருப்பதாக சென்னை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சந்தேக நபர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவம் புரளி என அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சோதனை குறித்து விளக்கம் அளித்துள்ளது.

இலங்கை, மே 3: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் (Pahalgam Terror Attack) தொடர்புடைய 6 பேர் விமானத்தில் செல்வதாக சென்னை விமான நிலையத்திற்கு கடந்த 2025 மே 3ம் தேதி ஒரு இ-மெயில் கிடைத்தது. இந்த இ-மெயிலை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து 229 பயணிகளுடன் கிளம்பிய இலங்கை ஏர்லைன்ஸ் விமானம், இலங்கையின் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் 6 சந்தேகத்திற்குரிய லஷ்கர் – இ-தொய்பா பயங்கரவாதிகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், கட்டாய பாதுகாப்பு நடைமுறையை கருத்தில்கொண்டு, சிங்கப்பூருக்கு அடுத்த திட்டமிடப்பட்ட விமான சேவையான UL 308 விமானம் தாமதமாக இலங்கையில் இருந்து கிளம்பியது.
என்ன நடந்தது..?
#BREAKING : SriLankan Airlines Flight number UL 122 from Chennai to Colombo was searched after Indian intel flagged a suspect linked to the #Pahalgam attack may be onboard. pic.twitter.com/uyn4px2O6x
— ConflictX (@ConflictXtweets) May 3, 2025
கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளையும், ஒரு உள்ளூர்வாசியையும் கொன்ற பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 பயங்கரவாதிகள் கொழும்பு செல்லும் விமானத்தில் பயணிப்பதாக சென்னை விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ஐடிக்கு காலை 11 மணியளவில் ஒரு இ-மெயில் வந்தது. இ-மெயில் வந்த நேரத்தில் விமானம் வானில் பறந்துவிட்டதால், சென்னை பகுதி கட்டுப்பாட்டு மையம் கொழும்பு விமான நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்து, விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளையும் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டது.
பயங்கரவாதிகள் சிக்கினார்களா..?
Sri Lankan police searched a flight arriving in Colombo from Chennai on May 3 following a tip-off about a potential suspect linked to the Pahalgam attack.
The search, conducted after the flight landed at Bandaranaike International Airport at 11:59 am, was coordinated with local… pic.twitter.com/1P6UAj5qPw
— The Assam Tribune (@assamtribuneoff) May 3, 2025
கொழும்பு விமான நிலையத்திற்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் சென்றடைந்ததும், விமானத்தின் முழுமையான பாதுகாப்பு சோதனை செய்யப்பட்டு, பயணிகள் இறக்கிவிடப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டனர். இந்த அதிரடி விசாரணையின்போது சந்தேகத்திற்கிடமான நபர் அல்லது செயல்பாடு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், அந்த மிரட்டலானது புரளி என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளக்கம்:
இதுகுறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “விமானம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, பின்னர் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தேடப்படும் சந்தேகர் நபர்கள் குறித்து சென்னை பகுதி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து எச்சரிக்கையை பெற்றத்தை தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டது” என்று தெரிவித்தனர்.