Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பல்கலைக்கழகங்கள் தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம் ? தமிழிசை கேள்வி

Tamiliasai Soundsararajan Condemns: தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நடைபெற்ற வணிகர் மாநாட்டில், பல்கலைக்கழகங்களை அரசியலாக்குவதை கண்டித்தார். நீட் தேர்வில் மாணவர்கள் மீதான அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகைக்கும், டாஸ்மாக் வருவாய்க்கும் இடையேயான முரண்பாட்டை சுட்டிக்காட்டினார். தமிழ் மொழி வளர்ச்சி குறித்த அரசின் அலட்சியத்தையும் கண்டித்தார்.

பல்கலைக்கழகங்கள் தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம் ?  தமிழிசை கேள்வி
சென்னையில் நடைபெற்ற வணிகர் மாநாட்டில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன்Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 05 May 2025 15:05 PM

சென்னை மே 05: சென்னையில் (Chennai) நடைபெற்ற வணிகர் மாநாட்டில் (Business Conference) பேசிய தமிழிசை சவுந்தரராஜன் (Tamilisai Soundararajan), பல்கலைக்கழகங்கள் முதலமைச்சரை பாராட்டும் விழாவை நடத்த கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். கல்வி நிறுவனங்கள் அரசியல் கருவியாக மாறக்கூடாது என்றும், இது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார். நீட் தேர்வில் அதிகாரிகள் தன்னிச்சையாக நடந்து மாணவர்களை துன்புறுத்துவதாகவும் கூறினார். ஈரோட்டில் ஒரு மாணவர் சட்டை விவகாரத்தை எடுத்துக்காட்டாக கூறினார். மகளிருக்கு ரூ.1000 வழங்கியும் டாஸ்மாக் மூலம் அதிகம் திருடப்படுவதாக விமர்சனம் செய்தார். தமிழ் வளர்ச்சி பற்றிய அரசியல் பேச்சுகள் பொய்யானவை என்றும், உண்மையில் தமிழ் முன்னேறவில்லை என்றும் அவர் சாடினார்.

பல்கலை. அரசியல் கருவியாக மாறக்கூடாது – தமிழிசை கண்டனம்

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் சார்பில் “மக்கள் சுகாதாரம் காக்க – மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு” என்ற தலைப்பில் வணிகர் மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

பல்கலைக்கழகங்களின் பாராட்டு விழா – கட்டாயமாக்கப்பட்டது?

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் முதலமைச்சரை பாராட்டும் விழாக்கள் நடத்தப்படுவது, கட்டாயமாக்கப்பட்ட நடவடிக்கையாகும் என தமிழிசை குற்றம்சாட்டினார். “பல்கலைக்கழகங்கள் தலைமைக் கழகங்களாக மாறாமல் இருப்பதற்கு என்ன உத்தரம்?” என கேள்வியெழுப்பிய அவர், கல்வி நிலையங்கள் அரசியல் சாயம் இல்லாமல் செயல்பட வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

நீட் தேர்வில் அதிகாரிகள் தன்னிச்சை – மாணவர்கள் பாதிப்பு

நீட் தேர்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து பேசும் போது, அதிகாரிகள் தங்களது தன்னிச்சையான நடவடிக்கைகள் மூலம் மாணவர்களை துன்புறுத்துவதாகவும், நியாயமான வாய்ப்புகளை பறிக்கக் கூடாது என்பதற்காக வழிமுறைகள் இருந்தாலும், நடைமுறை தவறாக இருப்பதாகவும் தமிழிசை சாடினார். ஈரோட்டில் ஒருமாணவரின் சட்டை பட்டன் விவகாரம் முக்கிய எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டது.

டாஸ்மாக் செலவுகள் – மகளிருக்கு நலத்திட்டம் ஏமாற்றமாகிறது

மகளிருக்கு ரூ.1000 வழங்குவது போலக் கூறியபோது, ஒரே நேரத்தில் டாஸ்மாக் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் சுமார் ரூ.6000 வரை செலவாகின்றது என தனியார் ஆய்வை மேற்கோளாக தமிழிசை தெரிவித்தார். இது மக்களின் நலனை புறக்கணிக்கும் அரசின் இரட்டை நெறிமுறையை வெளிப்படுத்துகிறது என அவர் கூறினார்.

“கள்” போதைப்பொருளா? மருத்துவரின் பார்வை

“கள்” என்பது போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய தமிழிசை, மருத்துவராக தானும் இது பற்றி தனிப்பட்ட வகையில் கருத்து தெரிவிப்பதாக கூறினார். அளவோடு எடுத்தால் களில் சத்துக்கள் இருக்கின்றன என்ற கருத்தும் அவர் பகிர்ந்தார்.

தமிழ் மொழி பாதுகாப்பு – கேள்விக்குறிகள்

மொழிப்பொருள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த தமிழிசை, “பலமொழி” என்பது திணிப்பாக அமையக்கூடாது என கூறினார். “தமிழ்நாட்டில் தமிழ் இல்லையே!?” எனச் சுட்டிக்காட்டிய அவர், அரசியல்வாதிகள் சொல்வதுபோல அவர்களது வீடுகளில் தமிழ்ப்பெயர்கள் இல்லையென்றும், உண்மையில் தமிழ் வளர்க்கப்படுகிறதா? என்பது சந்தேகத்திற்குரியது என்றும் விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசும் தமிழிசை, மாநில அரசின் நடவடிக்கைகள், கல்வி, தேர்வுகள், மதுகுடிப்பு, மொழி – அனைத்திலும் அரசியல் பின்னணியில் மக்களின் உணர்வுகளை தவிர்த்து செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

தவெக தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த போலீஸ்... நடந்தது என்ன?
தவெக தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த போலீஸ்... நடந்தது என்ன?...
அமேசானில் அதிரடி தள்ளுபடி விலையில் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்!
அமேசானில் அதிரடி தள்ளுபடி விலையில் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்!...
போட்ல செல்ல ஆசையா? அப்போ கன்னியாகுமரிக்கு போங்க..!
போட்ல செல்ல ஆசையா? அப்போ கன்னியாகுமரிக்கு போங்க..!...
அடுத்தடுத்து வந்த இ-மெயில்! முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்..!
அடுத்தடுத்து வந்த இ-மெயில்! முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்..!...
கொடைக்கானலில் விஜய்யின் 'ஜன நாயகன்' ஷூட்டிங் ஓவர்!
கொடைக்கானலில் விஜய்யின் 'ஜன நாயகன்' ஷூட்டிங் ஓவர்!...
திண்டுக்கல்-நாகர்கோவில் கோடை சிறப்பு ரயில்: அட்டவணை விவரம் இதோ!
திண்டுக்கல்-நாகர்கோவில் கோடை சிறப்பு ரயில்: அட்டவணை விவரம் இதோ!...
பாகிஸ்தானியர்களால் ஹேக் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு தளங்கள்
பாகிஸ்தானியர்களால் ஹேக் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு தளங்கள்...
ராகு - கேது பெயர்ச்சி எப்போது? - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
ராகு - கேது பெயர்ச்சி எப்போது? - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!...
சனிப்பிரதோஷம் விரதம்.. வீட்டிலேயே மேற்கொள்வது எப்படி?
சனிப்பிரதோஷம் விரதம்.. வீட்டிலேயே மேற்கொள்வது எப்படி?...
வக்ஃப் சட்டம்: அரசியலமைப்புக்கு எதிரானதா? மே 15 முக்கிய தீர்ப்பு
வக்ஃப் சட்டம்: அரசியலமைப்புக்கு எதிரானதா? மே 15 முக்கிய தீர்ப்பு...
ஹெவி ஒர்கவுட் மூலம் உடல் எடையை குறைத்த நடிகை ரித்திகா சிங்!
ஹெவி ஒர்கவுட் மூலம் உடல் எடையை குறைத்த நடிகை ரித்திகா சிங்!...