Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TN Weather: வெயிலுக்கு குட் பை…. இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்…

Rain Likely in Southern Tamil Nadu: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மே 5 மற்றும் 6 தேதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மே 7 முதல் 9 வரை மழைத் தீவிரம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

TN Weather: வெயிலுக்கு குட் பை…. இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்…
இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 05 May 2025 14:20 PM

தமிழ்நாடு மே 05: தமிழகத்தில் (Tamilnadu) வரும் 2025 மே 5, 6 தேதிகளில் தென் மாவட்டங்களில் (South Tamil Nadu) இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் 9 செ.மீ. மழை பதிவாகியது. 05-05-2025 அன்று வேலூரில் 40.9°C ஆகவும், கரூர் பரமத்தியில் 19.0°C ஆகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 2025 மே 5, 6 தேதிகளில் தென் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யலாம். 2025 மே 7–9 இல் மழைத் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன், லேசான மழை ஏற்படும் என வானிலை மையம் (Weather Center) தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்தது

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்தது. வடதமிழகத்தில் பல இடங்களில், தென்தமிழகத்தில் சில இடங்களில் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழை பதிவாகியது. அதிகபட்சமாக ராமேஸ்வரம், விருத்தாசலம், மீ மாத்தூர், சீர்காழி ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் 1 செ.மீ முதல் 8 செ.மீ. வரையான மழை அளவு பதிவாகியுள்ளது. கடலூர், திருச்சி, திருவள்ளூர், கோயம்புத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களின் நகரங்களிலும்,ளும், ஊர்களிலும் மழை பெய்தது.

வெப்பநிலை நிலவரம்: வெப்பம் சில இடங்களில் உயர வாய்ப்பு

05 மே 2025 அன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 40.9° செல்சியசாகவும், குறைந்தபட்சம் கரூர் பரமத்தியில் 19.0° செல்சியசாகவும் பதிவாகியுள்ளது. சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 1–2° செல்சியசால் அதிகமாக இருந்தது. வடதமிழக சமவெளி பகுதிகளில் 36–41°, தென்தமிழகத்தில் 38–40°, கடலோர பகுதிகளில் 34–40°, மலைப்பகுதிகளில் 23–29° செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு (05-05-2025 முதல் 11-05-2025 வரை)

தெற்குத் தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு–மேற்கு காற்றுகள் சந்திக்கும் பகுதி நிலவுவதால், 2025 மே 5, 6 ஆகிய தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மே 7 முதல் 9 வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைபெய்யக்கூடும். மே 10 மற்றும் 11 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.

வெப்பநிலை முன்னறிவிப்பு

05 முதல் 09 மே வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. 05 மற்றும் 06 தேதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 07 முதல் 09 வரை சில இடங்களில் 2–3° செல்சியசால் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை

05-05-2025 அன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35–36° செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 26–27° செல்சியசும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடியா?
சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடியா?...
என்னால் கார்த்தி மாதிரி நடிக்க முடியாது - நடிகர் சூர்யா ஓபன் டாக்
என்னால் கார்த்தி மாதிரி நடிக்க முடியாது - நடிகர் சூர்யா ஓபன் டாக்...
முருகன் அருளால் சுஜாதா வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவம்!
முருகன் அருளால் சுஜாதா வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவம்!...
உடல் எடை குறைப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்க இயற்கையான தீர்வு!
உடல் எடை குறைப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்க இயற்கையான தீர்வு!...
இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? – எம்.பி. வெங்கடேசன் கேள்வி
இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? – எம்.பி. வெங்கடேசன் கேள்வி...
ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?
ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?...
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?...
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?...
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை...
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!...
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?...