இந்தியா – பாகிஸ்தான் போரை முன் கூட்டியே கணித்த பாபா வங்கா?.. உண்மை என்ன?
Baba Vanga's India-Pakistan War Prediction : பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையே போர் உருவாகும் என்று பாபா வங்கா முன்கூட்டியே கணித்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா (India) மற்றும் பாகிஸ்தானுக்கு (Pakistan) இடையே போர் வெடித்தால் பாகிஸ்தான் அழிக்கப்படும் என்று பாபா வங்கா (Baba Vanga) கணித்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இணையத்தில் வைரலாகும் இந்த செய்தி பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் மோதல் குறித்து பாபா வங்கா கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக பிரச்னைகளை முன்கூட்டியே கணித்து வைத்துள்ள பாபா வங்கா?
பல்கேரியாவை (Bulgeria) சேர்ந்த பாபா வங்கா என்ற பெண் தனது 12 வயதிலேயே பார்வையை இழந்துள்ளார். இந்த நிலையில், அவர் உலகில் நடைபெற உள்ள பிரச்னைகளை முன்கூட்டியே கணித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் முதல் சமீபத்தில் நடைபெற்ற மியான்மர் நிலநடுக்கம் வரை அவர் கணித்து வைத்திருந்ததாக கூறப்பட்டது. பாபா வங்கா 1996 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரது பல கணிப்புகள் உண்மையாக மாறி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் மோதம் போக்கு நிலவி வரும் நிலையில், பாபா வங்கா இதனை முன்கூட்டியே கணிந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், உண்மையில் பாபா வங்கா இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே போர் நிலவும் என்றோ, பாகிஸ்தான் அழியும் என்றோ குறிப்பிடவில்லை. அவர், ஐரோப்பா ஒரு பெரிய சிக்கலை சந்திக்கும் என்றே கூறியுள்ளார். ஆனால், இதுவும் ஆதாரமற்ற கருத்தாகவே உள்ளது.
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே நிலவும் மோதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத அமைப்பு ஒன்று கொடூர துப்பாக்கிச்சூ தாக்குதலை நடத்தியது. இதில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றதால், இந்தியா பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு பாகிஸ்தான் மீது இந்திய அரசு அடுத்த அடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் அரசும் பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதம் போக்கு நிலவி வரும் சூழலில், பாபா வங்கா கூறியதாக கூறப்படும் இந்த தகவல் இணையத்தில் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.