Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தந்தூரி ரொட்டிக்கு போட்டி.. அடித்துக்கொண்டு உயிரிழந்த 2 சிறுவர்கள்!

Teens Died in Tandoori Roti Fight in Uttar Pradesh | உத்தர பிரதேச மாநில அமேதி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் யார் முதலில் தந்தூரி ரொட்டி வாங்குகிறார்கள் என போட்டி எழுந்த நிலையில், இரண்டு சிறுவர்கள் அடித்துக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தூரி ரொட்டிக்கு போட்டி.. அடித்துக்கொண்டு உயிரிழந்த 2 சிறுவர்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 05 May 2025 11:34 AM

உத்தர பிரதேசம், மே 05 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) தந்தூரி ரொட்டியை (Tandoori Roti) முதலில் யார் வாங்குவது என்ற போட்டியில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 17 வயது மற்றும் 18 வயது சிறுவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்ட நிலையில், உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுவர்கள் இடையே நடைபெற்ற போட்டி அவர்களது உயிரை பறித்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தந்தூரி ரொட்டிக்காக வந்த பிரச்னை – அநியாயமாக பரிபோன இரண்டு உயிர்கள்

உத்தர பிரதேச மாநிலம், அமேதி பகுதியில் மே 3, 2025 அன்று ராம் ஜீவன் வர்மா என்ற நபரின் மகள் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் பங்கேற்ற சிறுவர்கள் இரண்டு பேர், தங்களில் யார் முதலில் தந்துரி ரொட்டி வாங்குகிறார்கள் என போட்டி வைத்துள்ளனர். இந்த போட்டி காரணமாக எழுத பிரச்சனையில், இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்டுள்ளனர். பிறகு அது கைகலப்பாக மாறி உள்ளது.

அதன் காரணமாக சிறுவர்கள் இருவரும், குச்சியை எடுத்து ஒருவரை ஒருவர்ர தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த 17 வயது சிறுவன் அக கல்லூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிறகு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 18 வயதான ரவி குமார் என்று சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவர்கள் – ராம் ஜீவன் வர்மா பரபரப்பு தகவல்

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த திருமணமான பெண்ணின் தந்தை ராம் ஜீவன் வர்மா, நாங்கள் திருமண வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அப்போது தான் எங்களுக்கு சண்டை நடப்பதாக தகவல் கிடைத்தது. நாங்கள் அந்த இடத்திற்கு செல்வதற்குள்ளாகவே இரண்டு சிறுவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். நாங்கள் அங்கு செல்வதற்குள்ளாகவே எல்லாம் முடிந்தது என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?
ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?...
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?...
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?...
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை...
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!...
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?...
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண் - வைரல் வீடியோ!
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண் - வைரல் வீடியோ!...
வெயிலுக்கு குட் பை.... இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்...
வெயிலுக்கு குட் பை.... இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்......
Skype செயலியை மூடிய மைக்ரோசாப்ட் - Alternatives இதோ!
Skype செயலியை மூடிய மைக்ரோசாப்ட் - Alternatives இதோ!...
பிளே ஆஃப் பந்தயத்தில் 8 அணிகள்! KKR-க்கு உள்ளே வர வாய்ப்புள்ளதா?
பிளே ஆஃப் பந்தயத்தில் 8 அணிகள்! KKR-க்கு உள்ளே வர வாய்ப்புள்ளதா?...
பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்
பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்...