Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

700 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வாகனம்.. 3 ராணுவ வீரர்கள் பலி!

Jammu and Kashmir Military Vehicle Crash | ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், ராணுவ வாகனம் ஒன்று 700 அடி பள்ளத்தில் விழுந்த நிலையில், 3 ராணுவ அதிகாரிகள் சம்பவம் இடத்திலேயெ உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

700 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வாகனம்.. 3 ராணுவ வீரர்கள் பலி!
பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய வாகனம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 05 May 2025 08:28 AM

ஜம்மு & காஷ்மீர், மே 05 : ஜம்மு மற்றும் காஷ்மீரில் (Jammu and Kashmir) ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளான நிலையில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகருக்கு ராணுவ அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ராணுவ அதிகாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து எப்படி நடைபெற்றது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

700 அடி பள்ளத்தில் விழுந்த வாகனம் – 3 ராணுவ அதிகாரிகள் பலி

நேற்று (மே 04, 2025) ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகர் பகுதிக்கு இராணுவ வீரர்கள் தங்களது வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரம்பன் மாவட்டத்தில் உள்ள பேட்டரி சாஸ்மா என்ற இடம் அருகே ராணுவ வாகனம் சென்றபோது, ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து சுமார் 700 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த ராணுவ அதிகாரிகளான அமித் குமார், சுஜித் குமார் மற்றும் மாண்பகதூர் என்ற மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடனடியாக மீட்கப்பட்ட உடல்கள்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்களை மீட்பு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் நெடுஞ்சாலைகளில் ராணுவ வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருவது தொடர் கதையாக உள்ள நிலையில், ராணுவ வாகன விபத்தில் மூன்று ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பாக காணப்படும் ஜம்மு மற்றும் காஷ்மீர்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்படனர். இந்த விவகாரம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்திய கடும் கோபம் அடைந்தது. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுன் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், ஜம்மு மற்றும் காஷ்மீர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாங்கல்ய பலம் அருளும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் வரலாறு!
மாங்கல்ய பலம் அருளும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் வரலாறு!...
தந்தூரி ரொட்டிக்கு வந்த போட்டியில் இரண்டு சிறுவர்கள் பரிதாப பலி!
தந்தூரி ரொட்டிக்கு வந்த போட்டியில் இரண்டு சிறுவர்கள் பரிதாப பலி!...
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் பிரபல கோலிவுட் இயக்குநர்..
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் பிரபல கோலிவுட் இயக்குநர்.....
தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள்! பல்வேறு சாதனையை குவித்த ரியான் பராக்!
தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள்! பல்வேறு சாதனையை குவித்த ரியான் பராக்!...
18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி
18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் சுந்தர் சி...
கோயில் திருவிழாவில் தகராறு - 17 வயது சிறுவன் குத்தி கொலை!
கோயில் திருவிழாவில் தகராறு - 17 வயது சிறுவன் குத்தி கொலை!...
பஹல்காம் தாக்குதல் கண்டித்து தமிழ்நாட்டில் பாஜக இன்று போராட்டம்!
பஹல்காம் தாக்குதல் கண்டித்து தமிழ்நாட்டில் பாஜக இன்று போராட்டம்!...
வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!
வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி!...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை வெகுவாகப் பாராட்டிய அமைச்சர்......
மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!
மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!...
டெல்லிக்கு தலைவலி கொடுக்குமா ஹைதராபாத்..? ஹெட் டூ ஹெட் விவரம்!
டெல்லிக்கு தலைவலி கொடுக்குமா ஹைதராபாத்..? ஹெட் டூ ஹெட் விவரம்!...