தனது முதல் தெலுங்கு படத்தின் அனுபவத்தைப் பற்றி பேசிய நடிகை இவானா
Actress Ivana: மலையாளம் மற்றும் தமிழில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை இவானா தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடிகையாக அடியெடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் தனது முதல் தெலுங்கு படம் அனுபவம் குறித்து நடிகை இவானா சமீபத்தில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

மலையாள சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான மாஸ்டர்ஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் நடிகை இவானா (Actress Ivana). இவர் நடிப்பில் வெளியான அறிமுகப் படம் ஆகும். இதனை தொடர்ந்து மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் நடிகை இவான. பின்னர் 2018-ம் ஆண்டு இயக்குநர் பாலா (Director Bala) இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை இவானா. இந்தப் படத்தில் நாயகியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். இவர்களுடன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ், டாக்டர் குருசங்கர் தங்கமணி பிரப், குளப்புள்ளி என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் காதலியாக நடிகை இவான நடித்திருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தில் நடித்தார் நடிகை இவானா. இந்தப் படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். இதில் நடிகை இவானா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகை இவானா 2022-ம் ஆண்டு லவ் டுவே படத்தில் நடித்தார்.
இந்தப் படத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்திருந்தார். இது இவர் நாயகனாக நடித்த முதல் படம் ஆகும். மேலும் இந்தப் படத்தின் மூலம் தான் நடிகை இவானா நாயகியாக கோலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆனார். இன்றைய கால இளைஞர்களின் காதலை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் வரவேற்பைப் தொடர்ந்து 2023-ம் ஆண்டு தோனியின் தயாரிப்பு நிறுவனம் கோலிவுட்டில் தயாரித்த முதல் படமான லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்திருந்தர் நடிகை இவானா. இதில் நடிகை நதியாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படங்களைத் தொடர்ந்து தமிழில் மதிமாறன், கள்வன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த இவானா சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது.
இந்த நிலையில் நடிகை இவானா தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படத்திற்கு சிங்கிள் என்று பெயர் வைத்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீ விஷ்ணு நாயகனாக நடித்துள்ளார். இரண்டு நாயகிகள் உள்ள இந்தப் படத்தில் ஒரு நாயகியாக நடிகை இவானா நடித்துள்ளார்.
நடிகை இவான சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
சமீபத்தில் இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகை இவானா பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி நடிகை இவானா பேசியதாவது, பிரபல தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர்கள் ஸ்ரீ விஷ்ணு, வெண்ணிலா கிஷோர் மற்றும் கெட்டிகாவுடன் பணிபுரிந்தது அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது.
இந்தப் படத்தில் தான் ஹரினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் ஹரினி கதாப்பாத்திரம் ஒரு நடன கலைஞர் எனவும் தனக்குநடனமாடுவது பிடிக்கும் என்கின்ற காரணத்தால் இந்த கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.