Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Devald Brevis DRS Controversy: திரையில் ஓடாத டைமர்.. தவறான முடிவால் அவுட்டான பிரெவிஸ்… இணையத்தில் எழும் குரல்கள்..!

DRS Review: ஐபிஎல் 2025ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற போட்டியில், டெவால்ட் பிரெவிஸ் அவுட்டானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லுங்கி நிகிடி வீசிய பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பட்டதாகத் தெரிந்தாலும், அம்பயர் அவுட் எனக் கொடுத்தார். டிஆர்எஸ் கேட்டபோது, நேரம் முடிந்துவிட்டதாக மறுக்கப்பட்டது. இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devald Brevis DRS Controversy: திரையில் ஓடாத டைமர்.. தவறான முடிவால் அவுட்டான பிரெவிஸ்… இணையத்தில் எழும் குரல்கள்..!
பிரெவிஸ் அவுட்டான விதமும், டி.ஆர்.எஸ் கேட்கப்பட்டதும்..Image Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 04 May 2025 14:46 PM

ஐபிஎல் 2025ல் (IPL 2025) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சென்னை வீரர் டெவால்ட் பிரெவிஸ் (Dewald Brevis) ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டபோது, ஒரு சர்ச்சைக்குரிய தருணம் உருவானது. அது தற்போது சமூக வலைதளங்களில் அதிக விவாதங்களை கிளப்பி வருகிறது. சிலர் அம்பயர் செய்தது தவறு என்றும், சிலர் அம்பயர் செய்தது சரி என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை பிரெவிஸ் அவுட்டாகாமல் இருந்திருந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025ல் தனது 3வது வெற்றியை பதிவு செய்திருக்கலாம். இந்தநிலையில், டெவால்ட் பிரெவிஸ் அவுட்டானது குறித்த விவரங்களை விரிவாக பார்ப்போம்.

என்ன நடந்தது..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி 17வது ஓவரை வீசினார். அப்போது, சிறப்பாக ஆடி கொண்டிருந்த ஆயுஷ் மத்ரே 94 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார். இதன்பிறகு, டெவால்ட் பிரெவிஸ் பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். லுங்கி நிகிடி வீசிய 3வது பந்து நேராக ஃபுல் டாஸாக வந்து பிரெவிஸின் பேடுகளில் நேராக பட்டது. அப்போது லுங்கி நிகிடி மற்றும் சக பெங்களூரு அணி வீரர்கள் அவுட் என அம்பயரிடம் முறையிட, கள அம்பயராக நின்றிருந்த நிதின் மேனன் அவுட் என தனது விரலை உயர்த்தினார்.

நேராக ஓடி வந்த பிரெவிஸ் அவுட்டா இல்லையா என்பதை ஜடேஜாவிடம் சென்று பேசி டிஆர்எஸ்-க்கு சைகை காட்டினார். திரையில் 15 வினாடிகள் கொண்ட DRS டைமர் எதுவும் காட்டப்படவில்லை, மேலும் பிரெவிஸ் அதை மறுபரிசீலனை செய்ய விரும்பியபோது, ​​அம்பயர்கள், ‘இல்லை, நீங்கள் வெளியேற வேண்டும் டிஆர்.எஸூக்கான நேரம் முடிந்து விட்டது’ என்றார்கள். இது தொடர்பாக, களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஹாவும் அம்பயர்களுடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறந்த பார்மில் இருந்த பிரேவிஸின் இந்த ஆட்டமிழப்பு, போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. இதன் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.

அவுட்டான காட்சி:


டெவால்ட் பிரெவிஸ் டிஆர்எஸ் கேட்டபோது, ​​நடுவர் நிதின் மேனன் மறுத்துவிட்டார். டி.ஆர்.எஸ் எடுப்பதற்கான 15 வினாடிகள் நேரம் முடிந்துவிட்டதாக கூறினர். உண்மையில், ஒரு ரிவ்யூ எடுக்கப்பட வேண்டும் என்றால், அதற்காக ரிவ்யூ டைம் மைதானத்தில் உள்ள பெரிய எல்இடி திரையில் ஓடும். ஆனால், பிரெவிஸூக்கு அவுட் கொடுக்கப்பட்டபோது, அப்படியான டைம் எதுவும் எல்இடி திரையில் ஓடவில்லை.

டெவால்ட் பிரெவிஸ் அவுட் இல்லை:

டெவால்ட் பிரெவிஸ் அவுட்டாகி வெளியே சென்றபோது, அதன் காட்சிகள் திரையில் காட்டப்பட்டது. அப்போது லுங்கி நிகிடி வீசிய பந்தானது கால் ஸ்டம்பிற்கு வெளியே இருந்தது. லெக் ஸ்டம்பிற்குப் பிறகு இன்னும் இரண்டு விக்கெட்டுகள் இருந்தாலும், அந்த பந்தானது ஸ்டெம்பை தாக்கியிருக்காது. எனவே இது அவுட் இல்லை. இதன் காரணமாக, முதல் பந்திலேயே பிரெவிஸ் தனது கணக்கைத் திறக்காமலேயே அவுட் ஆனார். இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 213 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பிரெவிஸ் அவுட்டான விதம் குறித்த முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜன நாயகன் ஷூட்டிங்... ரசிகர்களை பார்க்க ஜீப்பில் வந்த விஜய்...
ஜன நாயகன் ஷூட்டிங்... ரசிகர்களை பார்க்க ஜீப்பில் வந்த விஜய்......
ராயன் படப் பாடலை மேடையில் பாடி அசத்திய தனுஷ் - ஏ.ஆர். ரஹ்மான்!
ராயன் படப் பாடலை மேடையில் பாடி அசத்திய தனுஷ் - ஏ.ஆர். ரஹ்மான்!...
கிஸ் பட டைட்டில் உரிமை.. கேட்டவுடன் கொடுத்த பிரபல இயக்குநர்!
கிஸ் பட டைட்டில் உரிமை.. கேட்டவுடன் கொடுத்த பிரபல இயக்குநர்!...
ஆக்ரோஷமாகி ஊழியர்களை தாக்கிய ரோபோட் - வைரல் வீடியோ!
ஆக்ரோஷமாகி ஊழியர்களை தாக்கிய ரோபோட் - வைரல் வீடியோ!...
100 கோடி வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் புதிய ECINET செயலி!
100 கோடி வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் புதிய ECINET செயலி!...
தூசி அதிகமாக ஆக்கிரமிப்பு செய்கிறதா..? இதை செய்தால் வீடு க்ளீன்!
தூசி அதிகமாக ஆக்கிரமிப்பு செய்கிறதா..? இதை செய்தால் வீடு க்ளீன்!...
சந்தானம் அந்தப் படத்தில் அப்படி பன்னது எனக்கு பிடிக்கல
சந்தானம் அந்தப் படத்தில் அப்படி பன்னது எனக்கு பிடிக்கல...
சூரசம்ஹாரம் கிடையாது.. இப்படியும் ஒரு முருகன் கோயில்!
சூரசம்ஹாரம் கிடையாது.. இப்படியும் ஒரு முருகன் கோயில்!...
அடுத்த 3 மணிநேரத்தில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
அடுத்த 3 மணிநேரத்தில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?...
FD-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் - பட்டியல் இதோ!
FD-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் - பட்டியல் இதோ!...
ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட் இதோ
ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட் இதோ...