UPI : யுபிஐ-ல் வந்த அதிரடி மாற்றங்கள்.. இனி எல்லாம் மின்னல் வேகத்தில் நடக்கும்!

NPCI Boosted UPI Speed | இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். சிறிய பெட்டி கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை யுபிஐ செயலிகள் பயன்பாட்டில் உள்ளதால் மிக எளிதாக பண பரிமாற்றம் செய்ய, அது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

UPI : யுபிஐ-ல் வந்த அதிரடி மாற்றங்கள்.. இனி எல்லாம் மின்னல் வேகத்தில் நடக்கும்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Jun 2025 10:33 AM

இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் யுபிஐ சேவையானது (Unified Payment Interface) பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதனை மேலும் பயனுள்ளதாக மாற்ற இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது (NPCI) பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் விரைவாகவும், எளிதாகவும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் பல புதிய விதிகளையும், அம்சங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், யுபிஐ-ல் தற்போது சில புதிய மாற்றங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதன் மூலம் மிக விரைவாகவும், எளிதாகவும் யுபிஐ செயலிகளை பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் யுபிஐ

இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணிப்பதற்கு சான்றாக இந்தியர்கள் யுபிஐ பண பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். முன்பெல்லாம் யாருக்கேனும் பணம் அனுப்ப வேண்டும் என்றால் வங்கிகளுக்கு சென்று பல மணி நேரம் காத்திருந்து செய்து வந்த வேலைகளை எல்லாம் தற்போது யூபிஐ மூலம் மிக விரைவாக செய்து முடித்து விட முடியும். இதன் காரணமாக இந்தியாவில் பலரும் யுபிஐ-ஐ அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்தியாவின் கடைகோடி கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை என அனைத்து இடங்களிலும் இந்த யுபிஐ கட்டண முறை பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு மிக முக்கிய அம்சமாக யுபிஐ உள்ள நிலையில், அதில் தற்போது சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பண பரிவர்த்தனை முதல் இருப்பு சோதனை வரை – நேரம் குறைப்பு

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், யுபிஐ செயலிகளின் வேகத்தை அதிகரித்துள்ளது. யுபிஐ செயலியில் முன்னதாக பரிவர்த்தனை செய்வதற்கான நேரம் 30 விநாடிகளாக இருந்தது. தற்போது அந்த வசதியானது வெறும் 15 விநாடிகளில் முடியும்படி சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல வங்கி இருப்பை செக் செய்வதற்கான நேரம் 30 விநாடிகளாக இருந்த நிலையில், அது வெறும் 10 விநாடிகளாக குறைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மேலும், ஒருவேளை பணம் செல்வது தோல்வியடைந்தால் அது மீண்டும் நம்முடைய அக்கவுண்டுக்கு திரும்ப அனுப்புவதற்கான (Transaction Reversal) நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கு 30 விநாடிகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  தற்போது அது  10 விநாடிகள் மட்டுமே என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. யுபிஐ ஐடியை சரிப்பார்ப்பதற்கான நேரமும் 15 விநாடிகளில் இருந்து 10 விநாடிகளாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய மாற்றங்கள் இன்று (ஜூன் 16, 2025) முதல் அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.