Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரு நாளைக்கு ரூ.5,000 மட்டும் தான்.. யுபிஐ சர்க்கிளில் வந்த முக்கிய மாற்றம்!

UPI Circle Payment New Rules 2025 | யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், யுபிஐ சர்க்கிள் பேமெண்ட் விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரு நாளைக்கு ரூ.5,000 மட்டும் தான்.. யுபிஐ சர்க்கிளில் வந்த முக்கிய மாற்றம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 01 May 2025 13:55 PM

இந்தியாவில் உள்ள ஏராளமான பொதுமக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் தங்களது அன்றாட வாழ்வில் பண பரிவர்த்தனைகளை (Money Transaction) மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) அவ்வப்போது பல புதிய விதிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது, யுபிஐ மூலம்  பணம் அனுப்பும் ஒட்டுமொத்த பயனர்களுக்கும் பொருந்தும் வகையில் சில முக்கிய விதிகளை வெளியிட்டுள்ளது. எது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யுபிஐ சர்க்கிள் பேமெண்ட் தொடர்பான புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ள ஆர்பிஐ

யுபிஐ கொண்டு வந்துள்ள இந்த புதிய விதிகளால் பயனர்களுக்கு எந்த வித சிக்கலும் ஏற்படாது. மாறாக ஒரே வங்கி கணக்கில் இருந்து பல மொபைல் எண்களுக்கு பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்த நிலையில், யுபிஐ சர்க்கிள் பேமெண்டில் வந்துள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யுபிஐ சர்க்கிள் பேமெண்ட் என்றால் என்ன?

கூகுள் பே (Google Pay), போன் பே (Phone Pay) உள்ளிட்ட அனைத்து யுபிஐ செயலிகளும் சர்க்கிள் விதிகளை (Circle Rules) பின்பற்ற வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தெரிவித்துள்ளது. பொதுவாக வங்கி கணக்கு வைத்திருக்கும் பொதுமக்கள் தங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மூலம் தான் பண பரிவர்த்தனை செய்ய முடியும். ஒருவேளை இரண்டு மொபைல் எண்களை வைத்திருந்தாலும் அதில் எந்த மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதோ எந்த எண்ணை வைத்து மட்டும் தான் பண பரிவர்த்தனை செய்ய முடியும்.

இந்த நிலையில் தான், யுபிஐ சர்க்கிள் உதவுகிறது. இதன் மூலம் ஒரே வங்கி கணக்கில் இரண்டு அல்லது மூன்று மொபைல் எண்களை இணைந்து பணம் அனுப்ப முடியும். என்னதான் இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டாலும் பண பரிவர்த்தனை செய்ய முதன்மை கணக்காளரின் அனுமதி கட்டாயம் ஆகும். உதாரணமாக, வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தனது நண்பர் அல்லது உறவினர்கள் யாரேனும் ஒருவரின் மொபைல் எண்ணை தனது வங்கி கணக்கில் இணைத்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த நபர் கணக்கு வைத்திருக்கும் நபரின் வங்கி கணக்கில் இருந்து பண பரிவர்த்தனை செய்யலாம். ஆனால் ஒவ்வொரு முறை பண பரிவர்த்தனை செய்யும்போது கணக்கின் உரிமையாளர் அனுமதி அளித்தால் மட்டுமே பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

தற்பொது இந்த நடைமுறையில் தான் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, இந்த யுபிஐ சர்க்கிள் மூலம் இரண்டாம் பட்சமாக வங்கி கணக்கை பயன்படுத்தும் நபர்கள் ஒரு நாளைக்கு ரூ.5,000 மற்றும் ஒரு மாதத்திற்கு ரூ.15,000 வரை மட்டுமே பண பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியாகும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள்?
வெளியாகும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள்?...
வேறொரு தருணத்தில்! மதுரை மக்களுக்கு கோரிக்கை வைத்த விஜய்..!
வேறொரு தருணத்தில்! மதுரை மக்களுக்கு கோரிக்கை வைத்த விஜய்..!...
அந்த ரோலில் நடிக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டேன்- சிவகார்த்திகேயன்!
அந்த ரோலில் நடிக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டேன்- சிவகார்த்திகேயன்!...
Swiggy Instamart மூலம் டெலிவரி செய்யப்பட்ட தங்கம் - வைரல் வீடியோ!
Swiggy Instamart மூலம் டெலிவரி செய்யப்பட்ட தங்கம் - வைரல் வீடியோ!...
கோடை காலத்தில் சாக்ஸ் நாற்றமா..? இந்த 5 குறிப்புகள் சரிசெய்யும்!
கோடை காலத்தில் சாக்ஸ் நாற்றமா..? இந்த 5 குறிப்புகள் சரிசெய்யும்!...
ரயில் டிக்கெட் முன்பதிவில் வந்த 3 முக்கிய மாற்றங்கள்!
ரயில் டிக்கெட் முன்பதிவில் வந்த 3 முக்கிய மாற்றங்கள்!...
புதிய 'ஃப்ளெக்ஸி ஹோம் இன்சூரன்ஸ்' - என்ன ஸ்பெஷல்?
புதிய 'ஃப்ளெக்ஸி ஹோம் இன்சூரன்ஸ்' - என்ன ஸ்பெஷல்?...
திருத்தணி சித்திரை திருவிழா.. திருத்தேரோட்டம் எப்போது தெரியுமா?
திருத்தணி சித்திரை திருவிழா.. திருத்தேரோட்டம் எப்போது தெரியுமா?...
தியேட்டரில் சூர்யாவிற்கு வீடியோ கால் செய்த கார்த்திக் சுப்பராஜ்
தியேட்டரில் சூர்யாவிற்கு வீடியோ கால் செய்த கார்த்திக் சுப்பராஜ்...
CSK பிளேஆஃப் கனவு தகர்ந்தது.. விரக்தியை வெளிப்படுத்தி தோனி..!
CSK பிளேஆஃப் கனவு தகர்ந்தது.. விரக்தியை வெளிப்படுத்தி தோனி..!...
சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஒகே சொன்ன மத்திய அரசு.. காரணம் என்ன?
சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஒகே சொன்ன மத்திய அரசு.. காரணம் என்ன?...