Accept All கொடுக்கணுமா? Reject All கொடுக்கணுமா? குக்கீஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்

Think Before Accepting Cookies : இன்டர்நெட்டில் ஒரு குறப்பிட்ட தளத்துக்கு செல்லும்போது ‘Accept All’ அல்லது ‘Reject All’ என குக்கீஸ் குறித்த பாப் அப்கள் அடிக்கடி தோன்றும். எனவே அதனை ஏற்றுக்கொள்வதா? அல்லது தவிர்ப்பதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Accept All கொடுக்கணுமா? Reject All கொடுக்கணுமா? குக்கீஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்

மாதிரி புகைப்படம்

Published: 

20 May 2025 16:39 PM

இன்றைய இணைய உலகில் பல விஷயங்கள் குறித்து நமக்கு தெளிவு இருப்பதில்லை. அந்த வகையில் எந்தத் தளத்திற்கு சென்றாலும் ‘Accept All’ அல்லது  ‘Reject All’ என்ற குக்கீஸ் (Cookies) குறித்து ஒப்புதல் கேட்கும் பாப் அப்கள் தவிர்க்க முடியாதவை. பலர் அது குறித்து அறியாமல் உடனடியாக குளோஸ் செய்ய விரும்பி ‘Accept All’ என்பதை கிளிக் செய்து விடுகிறார்கள். அப்படி செய்வது அவர்களுக்கு பெரிய பிரச்னையில் முடியலாம். ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் அக்சப்ட் கொடுப்பதோ ரிஜக்ட் கொடுப்பதோ நமக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். அந்த வகையில்  இந்த ‘குக்கீஸ்’ என்றால் என்ன? அதை ஏற்கும் அல்லது மறுக்கும் முடிவுகளால் நமக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குக்கீஸ் என்றால் என்ன?

குக்கீஸ் என்பது இணையதளங்களுக்கு செல்லும் நாம் அதனை பயன்படுத்துவதற்கு ஏற்ப நமது சிஸ்டம் அல்லது மொபைலில் சேமிக்கும் சிறிய ஃபைல்களை குறிக்கும். உங்கள் புரோசரில்  அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவே இவை உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு வெப்சைட்டிற்கு நாம் செல்லும் போது அதுகுறித்த தகவல்களை, விருப்பமான மொழி தேர்ந்தெடுப்பதற்கு, கடந்த காலத்தில் அந்த வெப்சைட்டிற்கு வந்ததை நநினைவில் வைத்திருக்க இந்த குக்கீஸ் உதவுகின்றன. இதில் செஷன் குக்கீஸ் (Session Cookies) என்பது தற்காலிகமானவை. நாம் அந்த வெப்சைட்டில் இருந்து வெளியேறியவுடன் அழிக்கப்படும்.  நிலையான குக்கீஸ் (Persistent Cookies) நீண்ட காலம் உங்களின் தகவல்களை நினைவில் வைத்திருக்க உங்களது சிஸ்டம் அல்லது மொபைல்களில் ஃபைல்களை சேமிக்கும்.

குக்கீஸ்களை ஏற்க வேண்டுமா? மறுக்க வேண்டுமா?

இணையதளங்களில் ‘essential cookies’ மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளன.  இவை தளத்தின் அடிப்படை செயல்பாடுகளுக்கு தேவையானவை. மேலும்  Functional Cookies என்பது உங்களின் விருப்ப மொழி மற்றும் பகுதிகளை போன்றவற்றை நினைவில் வைக்கும். அதே போல Analytics Cookies தளத்தில் பயனர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை கண்காணிக்க உதவும்.  Advertising Cookies என்பது உங்கள் நீங்கள் தேடுபவற்றை பதிவு செய்து, அதற்கு ஏற்ப விளம்பரங்களை அளிக்க உதவும்.  இதில் Advertising Cookies என்பது பெரும்பாலும் Google Ads போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.

எனவே நீங்கள் Accept All என கொடுக்கும்போது அனைத்து வகை குக்கீஸ்களையும் அனுமதிக்கின்றீர்கள் என்று அர்த்தம். இதனால் உங்கள் புரௌசிங் அனுபவம் சிறந்ததாக இருக்கும். ஆனால் உங்கள் பிரைவசி பாதிக்கும்.  Reject All என கொடுக்கும்போது அடிப்படை செயல்பாடுகளை தவிர மற்ற அனைத்து குக்கீஸ்களும் தடுக்கப்படும். இது உங்கள் பிரைவசிக்கு பாதுகாப்பாக இருக்கும். மேலும் நீங்கள் எப்போதும் வேண்டுமானாலும் தளத்தின் ‘Cookie Settings’ பகுதியில் சென்று உங்கள் விருப்பங்களை மாற்றலாம்.

உங்கள் பிரைவசி மீது குக்கீஸ்களின் தாக்கம்

ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டுவந்த ஜெனரல் புரொடக்சன் ரெகுலேசன் என்ற சட்டம் இணையதளங்களுக்கு கடுமையான கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன் படி அடிப்படை தேவை இல்லாத குக்கீஸ்களுக்கு பயனர்களின் அனுமதி அவசியம் என்றும் பயனர்களிடம் இருந்து எந்தெந்த தகவல்கள் சேமிக்கப்படுகின்றன என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் பயனர்கள் தங்கள் ஒப்புதலை நீக்க அவர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.