ஏசி வெடிப்பதற்கான காரணம் இதுவா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க
AC Safety Tips : ஏசி வெடித்து விபத்து ஏற்படும் செய்திகளை நாம் அடிக்கடி நாம் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் ஏசி வெடிப்பதற்கான காரணம் என்ன ? அவற்றை எப்படி தவிர்ப்பது ? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
ஏசி (AC) இல்லாமல் கோடைகாலத்தை (Summer) எதிர்கொள்வது மிகவும் சவாலான ஒன்று. இதன் காரணமாக முன்னர் ஆடம்பரமாக பார்க்கப்பட்ட ஏசி தற்போது அத்தியாவசியமான பொருளாக மாறியிருக்கிறது. தற்போது ஏசி விற்பனை முன்பைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் அதனை எப்படி கையாள்வது என பலருக்கும் தெரிவதில்லை. நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில தவறுகளால் ஏர் கண்டிஷனர் வெடித்துச் சிதறும் ஆபத்து இருக்கிறது. ஹைதராபாத் (Hyderabad), டெல்லி மற்றும் மீரட் போன்ற நகரங்களில் ஏசி வெடித்து விபத்து ஏற்பட்ட செய்திகள் குறித்து நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இதற்குக் காரணம் வெப்பநிலை அதிகரிப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
உண்மையில், நாம் செய்யும் சில தவறுகளால் தான் ஏசி வெடிக்கிறது, சில சமயங்களில் கவனக்குறைவால் ஏசி வெடித்து மக்கள் உயிரிழக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.
ஏசி வெடிப்பதற்கு காரணமாக சொல்லப்படும் 5 விஷயங்கள்
- பல நேரங்களில் மின் பிரச்னை காரணமாக ஏசி வெடிக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் ஏசியை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். சர்வீஸின் போது ஏதேனும் பிரச்னை கண்டறியப்பட்டால், அதனை உடனடியாக சரிசெய்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அதனை அலட்சியப்படுத்தினால் பெரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
- ஏசி கம்ப்ரசர் அதிக வெப்பமடையத் தொடங்கினால், வெடிக்கும் அபாயம் அதிகரிக்கக்கூடும். ஏசியை 15 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தாமல் பயன்படுத்துவது அதிக வெப்பமடைவதற்குக் காரணமாக இருக்கலாம்.
- நீண்ட நேரம் ஏசியை இயக்குவதாலோ அல்லது சர்வீஸ் செய்யாமல் இருப்பதாலோ கம்ப்ரசர் அதிக வெப்பமடைகிறது, மேலும் கம்ப்ரசரிலும் வாயு கசியத் தொடங்குகிறது. இதன் காரணமாக அதிக வெப்பத்தால் தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, ஏசி சர்வீஸ் செய்யும்போது எரிவாயு அளவைச் சரிபார்க்கவும்.
- ஏசியை நிறுவும்போது வயரிங் சரியாக செய்யப்படாவிட்டால் அல்லது ஏசியின் வயரிங்கில் ஏதேனும் கோளாறு இருந்தால், அது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். மேலும் பணத்தை மிச்சப்படுத்த தரமற்ற வயரிங் கேபிள்கள் ஏசி வெடிக்கும் அபாயம் இருக்கிறது.
- தூசி மற்றும் அழுக்கு காரணமாக, ஏசி ஃபில்டர்களில் தூசி படிந்து அடைப்பு ஏற்படுகின்றன. இதனால் ஏசி ஃபில்டரை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். அப்படி ஃபில்டரை அடிக்கடி சுத்தம் செய்யாமல் விட்டால், ஏசியில் இருந்து போதிய குளிர்ச்சி கிடைக்காது. மேலும் அதே நேரத்தில் கம்ப்ரசரின் மீதான அழுத்தமும் அதிகரிக்கும். இதனால், ஏசி வெடிக்கக்கூடும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)