போலியான ஆதார் கார்டு, பான் கார்டை உருவாக்கும் சாட்ஜிபிடி – காத்திருக்கும் ஆபத்து
ChatGPT creates fake Aadhaar cards: ஹைதராபாத்தை சேர்ந்த யஷ்வந்த் சாய் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்து பதிவிட்டு, ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்திருக்கிறார். அதில், ஆர்யபட்டா என்ற பெயரில், 00/0000, ஜீரோ காலனி, ஜீரோபூர் என்ற முகவரியுடன் ஏதோ ஒரு நம்பருடன் கூடிய ஆதாரை உருவாக்கு என கட்டளையிடுகிறார். இதனையடுத்து உடனடியாக அதன் படியே ஆர்யாபட்டா பெயரில் ஆதாரை உருவாக்கியிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஏஐ டூல்களின் வருகைக்கு பிறகு நம்மால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. வாழ்க்கை மிகவும் எளிதாகி இருக்கிறது. ‘பரவால்ல பய நம்மள கேட்காம எதுவுமே செய்யறதில்லை’ என சாட் ஜிபிடி சொல்வதாக நெட்டிஷன்கள் மீம் போடும் அளவுக்கு அதனை பயன்படுத்த தொடங்கியிருக்கிறோம். சமீபத்தில் கிப்ளி (Ghibli) ஸ்டுடியோஸின் அனிமி படங்களை சாட்ஜிபிடி (ChatGPT) ரீகிரியேட் செய்து தர, அது உலக அளவில் டிரெண்டானது. கிப்ளி புகைப்படங்களை உருவாக்குவதை குறைத்துக்கொள்ளுங்கள், எங்கள் பணியாளர்கள் தூங்க வேண்டும் என ஓபன் ஏஐ சிஓ கோரிக்கைவிடுக்கும் அளவுக்கு அதனை பயன்படுத்த துவங்கியிருந்தனர். மற்றொரு பக்கம், கிப்ளி ஸ்டுடியோஸ் நிறுவனர் ஹயாவோ மியாசாகி அனிமி படங்களுக்கு தனது கையாலேயே ஓவியம் வரைந்தவர் . சாட் ஜிபிடி உருவாக்கும் படங்கள் அவரது உழைப்புக்கு அநியாயம் செய்யும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும் சாட் ஜிபிடி போன்ற ஏஐ டூல்களில் நமது புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் நமது அடையாளங்களை அது தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாட் ஜிபிடியானது அரசு ஆவணங்களான ஆதார், பான் கார்டு போன்றவற்றை உண்மையைப் போலவே போலியாக உருவாக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சாட் ஜிபிடிக்கு சரியான பிராம்ட் கொடுப்பதன் மூலம் நமக்கு தேவையான வகையில் மாற்றங்களுடன் கூடிய ஆதார், பான் கார்டு போன்றவற்றை உருவாக்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சாட்ஜிபிடி உருவாக்கும் போலி ஆதார் கார்டு
ChatGPT is generating fake Aadhaar and PAN cards instantly, which is a serious security risk.
This is why AI should be regulated to a certain extent.@sama @OpenAI pic.twitter.com/4bsKWEkJGr
— Yaswanth Sai Palaghat (@yaswanthtweet) April 4, 2025
ஹைதராபாத்தை சேர்ந்த யஷ்வந்த் சாய் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்து பதிவிட்டு, ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்திருக்கிறார். அதில், ஆர்யபட்டா என்ற பெயரில், 00/0000, ஜீரோ காலனி, ஜீரோபூர் என்ற முகவரியுடன் ஏதோ ஒரு நம்பருடன் கூடிய ஆதாரை உருவாக்கு என கட்டளையிடுகிறார். இதனையடுத்து உடனடியாக அதன் படியே ஆர்யாபட்டா பெயரில் ஆதாரை உருவாக்கியிருக்கிறது. அது தத்ரூபமாக ஒரிஜனில் ஆதார் போலவே இருக்கிறது.
மேலும் இந்த தகவலை வைத்தே பான் கார்டை உருவாக்கு என அவர் கட்டளையிட அதுவும் பான் கார்டை உருவாக்கியிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரு ஏமாற்றுக்காரர் இப்படி தமக்கு தேவையான வகையில் ஆதார், பான் கார்டை உருவாக்கி மோசடி செயல்களில் ஈடுபட முடியும் என்பதால் அவரது பதிவில் பலரும் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சாட்ஜிபிடியின் போலி ஆதார் கார்டால் காத்திருக்கும் ஆபத்து
இதனைத் தொடர்ந்து தங்களுக்கு விருப்பமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் போன்றவர்களின் போலியான ஆதார் கார்டை உருவாக்கி மகிழ்ந்து வருகின்றனர். மேலும் இதனை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த முடியாது என்றாலும் சில இடங்களில் போலி ஆவணமாக காட்டி தப்பிக்க முடியும் என்பதால் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என பலரும் தங்களது கவலையை பதிவு செய்து வருகின்றனர். மற்றொருபுறம் இனி ஆதார் கார்டில் நமது புகைப்படங்களை வைத்துக்கொள்ளலாம் என ஜாலியாகவும் நெட்டிஷன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.