இயக்குநருடன் கருத்து வேறுபாடு… மகுடம் படத்தை தானே இயக்குகிறார் விஷால்!

Vishal Magudam Movie: நடிகர் விஷாலின் நடிப்பில் 35-வது படமாக அறிவிக்கப்பட்டது மகுடம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்ப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை தற்போது விஷாலே இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குநருடன் கருத்து வேறுபாடு... மகுடம் படத்தை தானே இயக்குகிறார் விஷால்!

விஷால்

Published: 

15 Oct 2025 14:48 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தயாரிப்பாளராக வலம் வந்து தற்போது இயக்குநராகவும் படங்களை இயக்குகிறார் விஷால் (Actor Vishal). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் விஷாலின் நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி, ரத்னம் மற்றும் மத கஜ ராஜா ஆகிய படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மத கஜ ராஜா படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது விஷால் தனது 35-வது படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் அறிவித்தார். அதன்படி அந்தப் படத்திற்கு மகுடம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை இயக்குநர் ரவி அரசு இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்தப் படத்தில் நடிகை துஷாரா விஜயன் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தொடர்ந்து இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மகுடம் படத்தில் இயக்குநரான நடிகர் விஷால்:

அதன்படி இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் விஷால் இடையே படத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இந்தப் படத்தை தானே இயக்க நடிகர் விஷால் முடிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. முன்னதாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதில் மிஷ்கினுடன் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அவரே இயக்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த மகுடம் படத்திலும் விஷால் இயக்குநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஷூட்டிங் ஆரம்பிக்கிற ஒரு வாரம் முன்னாடிதான் பைசன் கதை படிச்சேன் – நடிகர் துருவ் விக்ரம்

இணையத்தில் கவனம் பெறும் விஷாலின் மகுடம் படத்தின் ஷூட்டிங் வீடியோ:

Also Read… பாகுபலி தி எபிக் படக்குழு வெளியிட்ட புது அப்டேட் – வைரலாகு எக்ஸ் போஸ்ட்