Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Seeman : 5வது முறையும் தனித்தே போட்டி.. நாதக தலைவர் சீமான் திட்டவட்டம்!

Seeman Open Up About 2026 Assembly Election | 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக - அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், தங்களது கூட்டணி நிலைப்பாடு குறித்து சீமான் பேசியுள்ளார்.

Seeman : 5வது முறையும் தனித்தே போட்டி.. நாதக தலைவர் சீமான் திட்டவட்டம்!
நாதக தலைவர் சீமான்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 19 Apr 2025 07:03 AM

சென்னை, ஏப்ரல் 19 : வெற்றி தோல்விகளை தாண்டி தனித்துதான் போட்டி என்று நாம் தமிழர் கட்சி (NTK – Naam Tamilar Katchi) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற உள்ள தமிழின பேரெழ்ச்சி கூட்டம் தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் நேற்று (ஏப்ரல் 18, 2025) கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த (Press Meet) அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், கூட்டணி குறித்து சீமான் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாம் தமிழர் கட்சியின் தமிழின பேரெழுச்சி கூட்டம்

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் (2026 Assembly Election) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. கூட்டணி அமைப்பது, கட்சி உட்கட்டமைப்பை சீர் செய்வது, பொதுமக்க்களை சந்திப்பது உள்ளிட்ட செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் தான் அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கூட்டணி குறித்து நாதக தலைவர் சீமான் பேசியுள்ளார்.

அமித்ஷா எக்ஸ் பதிவு

நாம் தமிழர் கட்சியின் தமிழின பேரெழுச்சி கூட்டம் மே 18, 2025 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஏப்ரல் 18, 2028) ஆலோசனையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் அவரது கூட்டணி நிலைப்பாடு குறித்து சிலவற்றை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

5வது முறையும் தனித்தே போட்டி – சீமான் திட்டவட்டம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், ஒரு கட்சியை தங்களது கூட்டணிக்கு வரவேண்டும் என எதிர்ப்பார்ப்பது இயல்பு தான். ஆனால் எங்களது நிலைப்பாடு ஒன்றுதான். தேர்தல் அரசியல், கட்சி அரசியல் செய்பவர்கள் தான் கட்சிகளை தேடி, கட்சி தலைமையை, தலைமை அலுவலகங்களை தேடி செல்வார்கள். நாங்கள் மக்கள் அரசியல் செய்பவர்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய  சீமான், ஏற்கனவே தொடர்ந்து 2 சட்டமன்ற தேர்தல், 2 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம். வெற்றி தோல்விகளையும் தாண்டி ஒரு கட்சி 5வது முறையும் தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி...
கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி
கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி...
ஹிட் 3 படத்தின் வெற்றி... நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
ஹிட் 3 படத்தின் வெற்றி... நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!...
பிளே ஆஃப் கனவுடன் RCB, KKR.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா CSK..?
பிளே ஆஃப் கனவுடன் RCB, KKR.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா CSK..?...
ஒன்று சேரும் 4 கிரகங்கள்.. இந்த 6 ராசிக்கு கிடைக்கும் பலன்கள்!
ஒன்று சேரும் 4 கிரகங்கள்.. இந்த 6 ராசிக்கு கிடைக்கும் பலன்கள்!...
எனக்கு அந்த ரோலில் நடிக்கவேண்டும் என்று ஆசை.. நடிகை ரேவதி!
எனக்கு அந்த ரோலில் நடிக்கவேண்டும் என்று ஆசை.. நடிகை ரேவதி!...
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு...
கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!...
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்...
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்......
இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த கோலி!
இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த கோலி!...
கலக்கல் நாயகி கயாடு லோஹர் பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா?
கலக்கல் நாயகி கயாடு லோஹர் பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா?...