வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்…. மாவட்ட வாரியான லிஸ்ட் இதோ – நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?
Draft Voter List : தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19, 2025 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. தற்போது மாவட்ட ரீதியாக பட்டியல் வெளியாகி வருகிறது. நீக்கப்பட்ட வாக்காளர்கள் எப்படி விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வெளியானது விரைவு வாக்காளர் பட்டியல்
சென்னை, டிசம்பர் 19: பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 14, 2025 அன்று தொடங்கி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் 4, 2025 அன்றுடன் பணிகள் முடிவடையவிருந்த நிலையில்,தித்வா புயல் உள்ளிட்ட காரணங்களால் படிவங்களை நிரப்பி வழங்க இரண்டு முறை கால அவகாசம் நீடிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த டிசம்பர் 14, 2025 அன்றுடன் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்தது. இதனையடுத்து டிசம்பர் 19, 2025 வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது மாவட்ட ரீதியாக பட்டியல் வெளியாகி வருகிறது.
மாவட்ட வாரியாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவரம்
தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் டிசம்பர் 19, 2025 இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட ரீதியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், தொடர்புகொள்ள முடியாதவர்கள் ஆகியவர்களின் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
- கோயம்புத்தூரில் 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.
- தருமபுரி மாவட்டத்தில் 81,515 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் 3.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
- சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
- திருச்சி மாவட்டத்தில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- அரியலூர் மாவ்டடத்தில் 24,368 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- கடலூர் மாவட்டத்தில் 2,46,818 வாக்காளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- மதுரை மாவட்டத்தில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,901 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- திருப்பத்தூர் மாவட்டத்தில் 1.16 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 6.19 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- கரூர் மாவட்டத்தில் 79 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- தேனி மாவட்டத்தில் 1,25,739 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- வேலூர் மாவட்டத்தில் 2,15,025 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் 1,93,706 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் 1,89,964 வாக்காளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் 75,378 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் 1,50,728 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- திருநெல்வேலி மாவட்டத்தில் 2,14,957 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- திருவாரூர் மாவட்டத்தில் 1,29,480 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் 57,338 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- தென்காசி மாவட்டத்தில் 1,51,902 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,53,373 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- நீலகிரி மாவட்டத்தில் 56,091 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,74,549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- சேலம் மாவட்டத்தில் 3,62,429 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- விழுப்புரம் மாவட்டம் 1,82,865 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,17,364 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,52,162 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- ஈரோடு மாவட்டத்தில் 3,25,429 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- கரூர் மாவட்டத்தில் 79,690 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 84,329 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,74,274 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.