ஒரே தண்டவாளத்தில் இரு மின்சார ரயில்கள்… பயணிகளுக்கு என்னாச்சு? பல்லாவரத்தில் பரபரப்பு!
Chennai EMU Train : சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் இரு மின்சார ரயில்களும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில், சரியான நேரத்தில் இரு ரயில்களும் நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னை, மே 21 : சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் இரு மின்சார ரயில்களும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. எனவே, பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். அதே நேரத்தில், சரியான நேரத்தில் இரு ரயில்களும் நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக இருப்பதாக மின்சார ரயில் சேவை. இந்த மின்சார ரயில் சேவை புறநகரை இணைக்கக் கூடிய வகையில், இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு என பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
ஒரே தண்டவாளத்தில் இரு மின்சார ரயில்கள்
சென்னை கடற்கரையில் புறப்படும் மின்சார ரயில் எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி என செங்கல்பட்டு சென்றடையும். இந்த வழித்தடத்தில் தான் பயணிகள் அதிகம் பேர் பயணம் மேற்கொள்கின்றனர்.
.இந்த மின்சார ரயில்களில் பயணிகள் பாதுகாப்பு பயணிக்க அவ்வப்போது பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2025 மே 21ஆம் தேதியான இன்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, பல்லாவரம் ரயில் நிலையத்தில் இரு மின்சார ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், பயணிகள் கூச்சலிட்டதாக தெரிகிறது. அதாவது, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 2025 மே 21ஆம் தேதியான இன்று காலை 8.30 மணியளவில் மின்சார ரயில் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்போது, பயணிகளை பல்லாவரம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு புறப்பட்டது.
பயணிகளுக்கு என்னாச்சு?
அப்போது, ரயிலின் ஆறாவது பெட்டியில் இருந்து புகை கிளம்பியது. இதனால், பல்லாவரம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ரயில் ஓட்டுநர், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் புகை வெளியேறியதை சரி செய்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, கடற்கரையில் இருந்து வந்த மின்சார ரயிலும் அதே தண்டவாளத்தில் வந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களை பார்த்த பயணிகள், கூச்சலிட்டனர். இதன் பின் ரயில், உடனடியாக நிறுத்தப்பட்டது. அந்த மின்சார ரயில் சுமார் 150 மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டது.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த நேரத்தில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். சில மணி நேரங்களுக்கு பிறகு, ரயிலின் பிரேக் சரி செய்யப்பட்டு, வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டது.