மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறித்த ஊழியர்.. பயத்தில் நகையை விழுங்கியதால் அதிர்ச்சி!
Tirunelveli Hospital Chain Snatching | திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மூதாட்டியிடம், மருத்துவமனை ஊழியர் ஒருவர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
திருநெல்வேலி, ஆகஸ்ட் 26 : திருநெல்வேலியில் (Tirunelveli) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் இருந்து மருத்துவமனை ஊழியர் சுமார் 5 பவுன் மதிப்பிலான தங்க நகையை பறித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியின் நகையை மருத்துவமனை ஊழியர் பறித்த நிலையில், அதிர்ச்சியடைந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டுள்ளார். அதனை கேட்டு ஓடிவந்த சக மருத்துவமனை பணியாளர்கள் குற்றத்தில் ஈடுபட்ட ஊழியரை சுற்றி வளைத்தனர்.
மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்
திருநெல்வேலி மாவட்டம், விக்ரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மாள். 79 வயதாகும் இவர், கணவன் இறந்துவிட்ட நிலையில் மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பம்மாளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில், குடும்பத்தினர் அவரை திருநெல்வேலியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க : உஷார்.. ஷூவில் இருந்த பாம்பு.. கவனிக்காமல் அணிந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!
கத்தி கூச்சலிட்ட மூதாட்டி
இந்த நிலையில், ஆகஸ்ட் 24, 2025 அன்று மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க நகையை மருத்துவமனை ஊழியர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதன் காரணமாக பயந்துப்போன அந்த ஊழியர் கழிவறைக்குள் சென்று மறைந்துக்கொண்டுள்ளார். இருப்பினும் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மருத்துவமனை ஊழியர்கள், அந்த நபரை சுற்றி வளைத்துள்ளனர்.
இதையும் படிங்க : Crime: அட்வைஸ் பண்ண சென்ற இடத்தில் இளைஞர் கொலை.. தாய் உட்பட 6 பேர் கைது!
நகையை விழுங்கியதால் அதிர்ச்சி
அவரை பிடித்து மருத்துவமனை ஊழியர்கள் விசாரணை செய்ததில் நகையை விழுங்கியதாக அவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் உத்தரவின் பேரில் அந்த மருத்துவமனை ஊழியருக்கு இனிமா கொடுக்கப்பட்டு அவரது வயிற்றில் இருந்த 5 சவரன் நகை மீட்கப்பட்டது.
இதையும் படிங்க : Thiruvallur Child Death: திருவள்ளூரில் பெரும் சோகம்! மூச்சுக்குழாயில் கடித்த வண்டு.. ஒரு வயது குழந்தை உயிரிழப்பு!
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நகை பறிப்பில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.