Tiruchendur Temple Kumbabishekam 2025: திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. ஏற்பாடுகள், பாதுகாப்பு குறிப்பு விவரங்கள் இதோ!
Thiruchendur Temple Consecration: திருச்செந்தூர் முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஜூலை 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக மருத்துவ முகாம்கள், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, தற்காலிக பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் போதுமான தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தை சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

திருச்செந்தூர், ஜூலை 6: 16 வருடங்களுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் (Thiruchendur Murugan Temple) வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேக விழா நாளை அதாவது 2025 ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவை (Tiruchendur Temple Consecration) சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத் துறையும் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்தநிலையில், திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அறிவுரை:
தூத்துக்குடியில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் 2025 ஜூலை 7ம் தேதியான நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வர வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் அப்பகுதியில் வறண்ட மேற்கு திசை காற்று வீசுவதாலும், கடல் காற்று நுழைவது தடைபடுவதாலும் 2025 ஜூலை 7ம் தேதியான நாளை திருச்செந்தூரில் 101 F வெப்பநிலை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, திருச்செந்தூர் வரும் பக்தர்கள் உடலில் நீரிழப்பு எதுவும் ஏற்படாத வகையில் தண்ணீர், இளநீர், பழச்சாறு போன்றவற்றை குடித்து உடல்நிலையை பார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




சிறப்பு ஏற்பாடுகள்:
- திருசெந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்க 20 ட்ரோன்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
- கோயிலை சுற்றி 20 இடங்களில் மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவ குழுக்கள், 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- பக்தர்கள் பாதுகாப்பு பணியில் 6,100 காவல்துறையினர், 550 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 160 சிசிடிவி கேமராக்கள் மூலம் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
- கடலில் புனித நீராடும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலோர பாதுகாப்பு பயிற்சி பெற்ற வீரர்களை அந்த பகுதியில் நிறுத்தப்படுகின்றனர்.
- தூய்மை பணிகளை மேற்கொள்ள 906 சுகாதாரப் பணியாளர்களும் 194 பாதுகாப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
16 ஆண்டுகளுக்கு பிறகு..
Thoothukudi, Tamil Nadu: The Maha Kumbhabhishekam festival of Subramanya Swamy Temple, Tiruchendur, will be held on 7th July between 6:15 am and 6:50 am. Festivities began on 27th June with Ganapathi Puja. A grand 8,000 sq. ft yagasala with 76 Om Kundams and 700 kumbhs has been… pic.twitter.com/C3vaJHr5L7
— IANS (@ians_india) July 1, 2025
திருச்செந்தூர் கும்பாபிஷேக சடங்குகள் கடந்த 2025 ஜூலை 1ம் தேதி கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கின. அதன்படி, நாளை 2025 ஜூலை 7ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை நடைபெறும். கடைசியாக கடந்த 2009ம் ஆண்டு திருச்செந்தூர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முருகனின் ஆறு படை வீடுகளில் (அறுபடை வீடு) இரண்டாவது படை வீடாகப் போற்றப்படும் திருச்செந்தூரில், மாநிலம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, பக்தர்கள் கும்பாபிஷேக சடங்குகளை தூரத்திலிருந்து காண பல்வேறு இடங்களில் ராட்சத LED திரைகள் நிறுவப்பட்டுள்ளன.