திருப்பரங்குன்றம் தீபத் தூண் தொடர்பான வழக்கு…இன்று தீர்ப்பு!
Thiruparankundram hill lighting of lamp Case: திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்ன உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வழங்கப்படும் என்பது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பதிலாக மலை உச்சியில் அமைந்திருக்க கூடிய தீபத்தூணியில் மகா தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்க விசாரித்த நீதிபத் டி. ஆர். சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மகா தீபத்தை ஏற்றலாம் என்று உத்தரவிட்டிருந்தார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மகா தீபம்
அந்த உத்தரவின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை (டிசம்பர் 3) மாலை தீபத் தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே. கே. ராமச்சந்திரன் ஆகியோர் முன்பு மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
மேலும் படிக்க: தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை – பரபரப்பான திருப்பரங்குன்றம் – 144 தடை உத்தரவு அமல்
மேல் முறையீட்டு மனு விசாரணை
இதில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் அரசுத் தரப்பு வாதத்தை முன் வைத்தார். அப்போது, மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கக்கூடிய நிலையில், அரசு தரப்பு மற்றும் தர்கா தரப்புக்கு அவகாசம் வழங்கவில்லை என்று தெரிவித்தார்.
மத மோதல் ஏற்படும் சூழல் உருவானது
சி ஐ எஸ் எப் பாதுகாப்பு நீதிமன்றத்துக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அது மனுதாரருக்கு எதற்காக வழங்கப்பட்டது. தனி நீதிபதியின் தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நேற்று மனுதாரர் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஒரு உடன் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று தீபம் ஏற்றியுள்ளார். எனவே அவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், நேற்று பேரிக்காடுகள் உடைக்கப்பட்டதுடன், போலீசார் தாக்கப்பட்டனர். இதனால், மத மோதல் நடைபெறும் சூழல் உருவானது. எனவே, தமிழக அரசின் அச்சம் உண்மையாகி விட்டது என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வழக்கில் இன்று தீர்ப்பு
இவற்றை எல்லாம் கேட்ட நீதிபதிகள் கடந்த 12 மணி நேரமாக என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்தனர். மேலும் இஸ்லாமியர்கள் தரப்பில் எந்த வாதமும் முன் வைக்காத நிலையில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் சூழ்ச்சி செய்கிறதா என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.