சென்னையில் தீபாவளி காலை பொழுது மழையுடன் தொடங்கும்.. பிற மாவட்டங்களில் எப்படி இருக்கும் – பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

Tamil Nadu Rain Alert: இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தீபாவளி காலை பொழுது மழையுடன் தொடங்கும்.. பிற மாவட்டங்களில் எப்படி இருக்கும் - பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

கோப்பு புகைப்படம்

Published: 

20 Oct 2025 06:15 AM

 IST

வானிலை நிலவரம், அக்டோபர் 20, 2025: தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இரவு முழுவதும் நல்ல கனமழை பதிவானது. அதே சமயத்தில் கொடைக்கானலிலும் நல்ல மழை பதிவு இருந்தது. மேகக் கூட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து கிழக்கிலிருந்து மேற்குநோக்கி நகர்வதன் காரணமாக இந்த மழை ஏற்பட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக தேனி, தெற்காசி, விருதுநகர், திருப்பத்தூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரவிருக்கும் நாட்களிலும் இந்த மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொட்டும் மழை:

இதே நேரத்தில், இதுவரை வடகிழக்கு பருவமழை சுமார் 58 சதவீதம் அதிகமாக பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் 13 செ.மீ., அருப்புக்கோட்டையில் 13 செ.மீ., கோவை மாவட்டம் மக்கினம்பட்டி பகுதியில் 12 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. 58 சதவீதம் அதிக மழை பதிவு – தலைவர் அமுதா..

மற்றொருபுறம், அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீபாவளி திருநாளான அக்டோபர் 2025 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு.. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

தீபாவளி காலை பொழுது மழையுடன் தொடங்கும் – பிரதீப் ஜான்:


காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அக்டோபர் 2025 தேதியான இன்று காலை முதல் நல்ல மழை இருக்கும் என்றும், பகல் நேரத்தில் படிப்படியாக குறையும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதே சமயம் தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவு நேரங்களில் கனமழை இருந்தாலும், பகல் நேரத்தில் மழையில் இருந்து சற்று விடுப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.