டெல்டா முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் வரை.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான் கணிப்பு..
Tamil Nadu Weather Alert: இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், ஜனவரி 9, 2026: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, பொட்டுவில் கிழக்கில் இருந்து 160 கிலோமீட்டர், பட்டிக்கலோ கிழக்கு–தென்கிழக்கில் இருந்து 190 கிலோமீட்டர், கம்பந்தோட்டா வடகிழக்கில் இருந்து 260 கிலோமீட்டர், திரிகோணமலை தென்கிழக்கில் இருந்து 280 கிலோமீட்டர், காரைக்காலில் இருந்து 570 கிலோமீட்டர், சென்னையிலிருந்து தெற்கு–தென்கிழக்கில் 740 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை பகுதியான திரிகோணமலை – யாழ்ப்பாணம் (ஜாப்னா) இடையே ஜனவரி 10, 2026 அன்று கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தீபாவளி, பொங்கல் ஆஃபர் போல்.. ஆஃபர் அறிவித்து காத்திருக்கிறார் விஜய்.. திருமாவளவன் விமர்சனம்!
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான்:
The rare Deep Depression will travel along the east coast of Sril Lanka and once it reaches Jaffna, it will weaken and fizzle out.
Delta to Cuddalore to Pondy to Chennai (KTCC) will be region in focus.
Chennai (KTCC) Today pleasant weather and light drizzles / rains may be… pic.twitter.com/gkThu51sv3
— Tamil Nadu Weatherman (@praddy06) January 9, 2026
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், இந்த அரிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கை பொட்டுவில் – யாழ்ப்பாணம் அருகே கரையை கடக்கும் போது வலுவிழக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: விஜய்க்கு ஆதரவு குரல் எழுப்பிய காங்., தலைவர்கள்.. ‘ஜனநாயகன்’ பட வழக்கில் இன்று தீர்ப்பு!!
மேலும், இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் முதல் கடலூர், புதுச்சேரி மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் நாட்களில் மழை பதிவாகும் என தெரிவித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைப் பொருத்தவரையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையில் பரவலாக மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 12ஆம் தேதி ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பயிர்களை பாதுகாக்க அறிவுறுத்தல்:
இந்த மழை பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் வடக்கு தமிழக மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதே சமயத்தில், ஜனவரி 12, 2026 அன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் சூழலில், ஈரப்பதம் காரணமாக உள் தமிழகத்திலும் தென் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.