தீபாவளி அன்று கனமழை பெய்யுமா? வெதர்மேன் கொடுத்த வானிலை அப்டேட்!

Diwali Weather : தமிழகத்தில் 2025 அக்டோபர் 20ஆம் தேதியான தீபாவளி நாளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, தீபாவளி நாளில் 2025ஆம் ஆண்டு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.

தீபாவளி அன்று கனமழை பெய்யுமா? வெதர்மேன் கொடுத்த வானிலை அப்டேட்!

தமிழ்நாடு வெதர்மேன்

Updated On: 

06 Oct 2025 08:19 AM

 IST

சென்னை, அக்டோபர் 06 :  2025 அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் கனமழை பெய்யக் கூடும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், 2025 அக்டோபர் 15 முதல் 20ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளார். அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யு என வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிவு இருக்கும் எனவும் பல்வேறு காற்றழுத்தம், புயல்கள் உருவாகலம் என கூறுகின்றனர்.   வடகிழக்கு பருவமழை தீபாவளி வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது. தீபாவளி நாளில் மழை பெய்யுமா அல்லது வறண்டு காணப்படுமா என்பது தெரியவில்லை.  இந்த நிலையில், அதுகுறித்து  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “2011ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னைக்கு மழை பெய்யுமா? 2025 அக்டோபர் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மழை பெய்யும். தீபாவளி நாளில் பல ஆண்டுகளுக்குப் பிறகு (2011) மழை பெய்யும் வாய்ப்பு மிக அதிகம். அன்றைய நாளில் தமிழக கடற்கரையில் பலத்த காற்று வீசக்கூடும். 2025 அக்டோபர் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதிக்கு இடையில் சுழற்சி தொடங்கியதில் இருந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் மழை பெய்யும். கடந்த காலங்களில் தீபாவளி அன்று சென்னையில் 30 மி.மீட்டருக்கு அதிகமாக மழை பொழிவு இருந்தது. 2011ஆம் ஆண்டில் ஒரு வருடம் மட்டுமே, சென்னையில் தீபாவளி அன்று மழையால் மோசமாக பாதித்தது.

Also Read : பிச்சு உதறபோகும் கனமழை.. அடுத்த 4 நாட்களுக்கு அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள்?

தீபாவளி அன்று கனமழை பெய்யுமா?


கடந்த 20 ஆண்டுகளில் எப்போதும் தீபாவளி அன்று வறண்டே காணப்படும். அதன்படி, 2025 அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி அன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை தீபாவளி நாளில் மழை பொழிவு இல்லை. 2011ல் தீபாவளி நாளில் மழை இருந்தது. அதன்பிறகு, 2025 அக்டோபர் 20ல் தீபாவளி அன்று மழை பெய்யும்” என்று கூறினார்.

Also Read : கனமழை எதிரொலி…. மாணவர்களின் பாதுகாப்புக்கு கடைபிடிக்க வேண்டிய 6 அறிவுரைகள் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

முன்னதாக, சென்னை வானிலை குறித்து பதிவிட்ட வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னையின் சில பகுதிகளில் இப்போது 2வது புயல் தாக்கும் நேரம் இது. காற்றின் திசை வடமேற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி உள்ளது, அதே நேரத்தில் வெப்பச்சலனம் நோக்கி மாறுகிறது. காஞ்சிபுரத்தை அடைந்துள்ள இந்தப் புயல், தென் சென்னை, தாம்பரம், ஓஎம்ஆர், ஈசிஆர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்யும். வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் தினமும் மழை பெய்யும். காற்றின் திசை வடமேற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி உள்ளது” என்றார்.